பள்ளி மாணவனுக்கு, நேர்ந்த கொடூரம் - நான்கு ஆசிரியர்கள் மீது FIR - என்ன நடந்தது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 25, 2023

Comments:0

பள்ளி மாணவனுக்கு, நேர்ந்த கொடூரம் - நான்கு ஆசிரியர்கள் மீது FIR - என்ன நடந்தது?

What%20happened%20to%20school%20student,%20brutality%20-%20FIR%20against%20four%20teachers


பள்ளி மாணவனுக்கு, நேர்ந்த கொடூரம் - நான்கு ஆசிரியர்கள் மீது FIR - என்ன நடந்தது?

பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவன் ஒருவர் எதிர்ச்சையாக சன்னல் வழியே வேடிக்கை பார்த்ததற்காக, நான்கு ஆசிரியர்கள் சேர்ந்து, அந்த மாணவனை கொடூரமாக தாக்கிய சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது. அதாவது, கடந்த 15ஆம் தேதி பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் இந்த சம்பவம் குறித்து, காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். அந்த புகாரில் சென்ற 15ம் தேதி, யமுனா விஹார் பகுதியில் இருக்கின்ற ஒரு பள்ளியில் படித்து வரும் தன்னுடைய மகன் வழக்கம் போல பள்ளிக்கு சென்று இருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அப்போது தன்னுடைய மகன் எதைச்சையாக ஜன்னல் மூலமாக வெளியே வேடிக்கை பார்த்ததற்காக, ஒரு ஆசிரியர் தன்னுடைய மகனை கொடூரமான முறையில் தாக்கியதாக குறிப்பிட்டு இருந்தார். மேலும், தன்னுடைய மகன் ஆசிரியரிடம் மன்னிப்பு கேட்ட பின்னரும் கூட, அந்த ஆசிரியர் தன்னுடைய மகனை வகுப்பறையில் இருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய மகனை நான்காவது கால அட்டவணை முடிவடைந்த உடன், அந்த மாணவனை அடித்த அதே ஆசிரியர், மீண்டும் அந்த மாணவனை அழைத்து அவருக்குத் தெரிந்த மூன்று ஆசிரியர்களோடு ஒன்று இணைந்து, அந்த மாணவனை கொடூரமான முறையில் தாக்கி உள்ளதாக அந்த மாணவனின் தாய் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், அந்த மாணவனை கொடூரமான முறையில், அந்த நான்கு ஆசிரியர்களும் தாக்கியது மட்டும் அல்லாமல், இது பற்றி யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்று மிரட்டும் தோனியில், அந்த மாணவனிடம் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த சம்பவம் குறித்து வீட்டிற்கு வந்தவுடன் தன்னுடைய தாயிடம் தெரிவித்து, அந்த மாணவன் அழுதுள்ளார். இதை கேட்ட அவருடைய தாய் அதிர்ச்சி அடைந்து இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்.

அந்த புகாரின் அடிப்படையில், அந்த நான்கு ஆசிரியர்கள் மீதும் காவல்துறை தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84633474