நிகர்நிலை பல்கலை.க்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 25, 2023

Comments:0

நிகர்நிலை பல்கலை.க்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம்

நிகர்நிலை பல்கலை.க்கு விண்ணப்பிக்க புதிய இணையதளம் நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோருக்காக, பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), புதிய இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து யுஜிசி செயலர் மணீஸ் ஆர்.ஜோஷி வெளியிட்ட செய்திக்குறிப்பு: யுஜிசி ஆலோசனையின் பேரில், யுஜிசி சட்டப்பிரிவின்கீழ் தகுதியுள்ள கல்வி நிறுவனங்களை நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், 2023-ம் ஆண்டு நிபந்தனையின் அடிப்படையில் நிகர்நிலை பல்கலைக்கழகத்துக்காக விண்ணப்பிக்கும் வகையில் புதிய இணையதளத்தை யுஜிசி உருவாக்கியுள்ளது. கடந்த செப்.19-ம் தேதி www.deemed.ugc.ac.in என்ற இணையதளம் யுஜிசி மூலம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், பொது மற்றும் தனித்துவமான வளாகங்களை கொண்டிருக்கும் தகுதியுள்ள கல்வி நிறுவனங்கள், நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம்.

Things-to-keep-in-mind-while-taking-the-print-of-the-question-paper


எனவே, ஆர்வமுள்ள உயர்கல்வி நிறுவனங்கள், ஆதரவு அமைப்புகள் தேவையான ஆவணங்களுடன் இணையதளத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு ugc.du.2023@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை அணுகலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84640641