School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.09.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, September 25, 2023

Comments:0

School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.09.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.09.2023

திருக்குறள் : 

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :266

தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

விளக்கம்:

தவத்தைச் செய்பவரே தமக்குரிய செயலைச் செய்தவர்; மற்றவர்களோ ஆசை வலைப்பட்டு வீணானவற்றைச் செய்தவர் ஆவர்.

பழமொழி :

Debt is the worst poverty

ஏழ்மை கடனினும் மேன்மை.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.

 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 

பொன்மொழி :

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு

-பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயர்நாடி. தந்தை பெரியார் 

பொது அறிவு :

1. பழங்காலத்தில் “சேரன் தீவு” என அழைக்கப்பட்ட நாடு எது?

விடை: இலங்கை 

2. “ஜனநாயகம்” என்ற அரசியல் தத்துவத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் யார்?

விடை: ஆப்ரகாம் லிங்கன் 

English words & meanings :

 gimmickry - a profusion of gimmicks. மந்திர தந்திரங்களை கையாளுதல்; grenade - கையெறி துண்டு

ஆரோக்ய வாழ்வு : 

கொண்டைக்கடலை:  ஃபைபர் மற்றும் இரும்பு சத்துக்கள் இதயத்தை தாண்டி ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் தேவையான முக்கியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். இதனால் இதய அபாயங்களை குறைப்பதில் கொண்டைக் கடலை முக்கிய பங்கு வகிக்கிறது.

நீதிக்கதை

 புத்திசாலி புலவரும் நெல்மணிகளும் 

அது ஒரு அழகிய கிராமம். அந்த கிராமத்தில் ஒரு திறமை வாய்ந்த புலவர் ஒருவர் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.சில மாதங்களுக்கு பிறகு,அவரது குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது மேலும் இதிலிருந்து மீள்வதற்கு என்ன செய்வதென்று புலவர் யோசித்துக்கொண்டு இருந்தார். புலவரின் நிலையைப் பார்த்த அந்த கிராமத்தின் தலைவர் புலவரிடம் சென்று, "நம் நாட்டின் அரசரை புகழ்ந்து பாடும் புலவருக்கு கேட்கும் பரிசினை கொடுக்கிறார். அந்த பரிசினைப் பெறுவதற்கு நீயும் முயற்சிக்கலமே" என்று கூறினார்.

இது சரியான தருணம் என்று கருதிய புலவரும் மன்னரை பார்க்க அரண்மனை நோக்கி பயணித்தார்.மன்னரைப் புகழ்ந்து பாடுவதற்காக சென்ற புலவர் அரண்மனையை அடைந்தார். மன்னரைப் பற்றியும், அவரது ஆட்சி பற்றியும் புகழ்ந்து பாடினார்புகழ்ந்து பாடிய புலவரின் பேச்சில் மகிழ்ச்சி அடைந்த அரசன் புலவனிடம், "உனக்கு என்ன பரிசு வேண்டுமோ கேள்" என கூறினார்.

புலவரும் இதுபோன்ற வறுமை எப்பொழுதும் என் குடும்பத்தை பாதிக்கக் கூடாதென்று யோசித்தார். பின்னர் அரண்மனையில் ஒரு சதுரங்க பலகை இருப்பதைப் பார்த்தார். "அரசே எனக்கு பெரிதாக எதுவும் வேண்டாம் அங்கே சதுரங்க பலகை ஒன்று இருக்கிறதல்லவா அதில் 1ம் கட்டத்தில் ஒரு

நெல்மணியை வைத்த பின் ஓவ்வொரு கட்டத்திற்கும் நெல்மணிகளை இரட்டிப்பாகி தர வேண்டும் என்றார்.மன்னர் புலவரைப்பார்த்து, "நெல்மணிகள் போதுமா? தங்கம், வைரம் போன்றவிலை உயர்ந்த பொருட்கள் வேண்டாமா?" என்று கேட்டார்.

புலவரோ "அரசே எனக்கு நெல்மணிகள் மட்டும் போதும்" என்று கூறிவிட்டார்.

பொன்னோ பொருளோ கேட்பார் என எண்ணியிருந்த அரசனும் புலவனை எள்ளி நகையாடி சரி என கூறிவிட்டார்.பின்னர் அரசர் அரண்மனை சேவகர்களிடம், "புலவர் கேட்ட நெல்மணிகளை எடுத்து

வாருங்கள்" என்று கட்டளையிட்டார். சேவகர்களும் சதுரங்கப் பலகையில் புலவர் கூறியபடியே நெல்மணிகளை சதுரங்க பலகையின் மேல் அடுக்கினர்.

1ம் கட்டத்தில் 1, 2ம் கட்டத்தில் 2, 3ம் கட்டத்தில் 4, 4ம் கட்டத்தில் 8 என நெல்மணிகளை அடுக்கினர்10ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 512 என ஆனது.

20ம் கட்டத்தில் வந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 5,24,288 என அதிகரித்தது.பாதி தூரம் அதாவது 32வது கட்டத்தை அடைந்த போது நெல்மணிகளின் எண்ணிக்கை 214,74,83,648 ஆக பெருகியது.

விரைவில் நெல்மணிகளின் எண்ணிக்கை கோடனகோடிகளை தாண்டியது. இதனால் அரசன் தன் ராஜ்ஜியம் முழுவதையும் அந்த புத்திசாலி புலவரிடம்

இழக்கும் நிலை ஏற்பட்டது.இந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு என்னைவிட இந்த புலவருக்கு அதிக திறமை உள்ளது என்று சபை முன் கூறிவிட்டு அரசர் பதவியை புலவரிடம்ஒப்படைத்தார்.

நீதி: கூட்டுப்பலனின் பெருக்கும் சக்தியை எப்பொழுதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இன்றைய செய்திகள்

25.09.2023

*வந்தே பாரத் ரயில் நெல்லைக்கு கிடைத்த ஒரு வரப் பிரசாதம் தமிழிசை சௌந்தர்ராஜன்.

*தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூபாய் 6 ஆயிரத்து 80 கோடி ஒதுக்கீடு - கவர்னர் ஆர். என்.ரவி பெருமிதம்.

*லேண்டர் ரோவர் செயல்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது- இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.

*பொதுமக்கள் புகார் தெரிவிக்க 'ஊராட்சி மணி' திட்டம் விரைவில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

*2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சதம் அடித்து அசத்திய ஸ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில்.

*ஆசிய விளையாட்டுப் போட்டி 2023: இன்று 5 பதக்கங்களை வென்றது இந்தியா!
துப்பாக்கி சுடுதல்: ரமிதா 2 பதக்கங்கள். துடுப்பு படகு போட்டி: 3 பதக்கங்கள்.

Today's Headlines

*Vande Bharat train was a boon offering to Nellai said Tamilisai Soundarrajan.

 * Allotment of 6 thousand 80 crore rupees for Tamil Railway projects - Governor R.  N. Ravi .

 *Lander rover is likely to become operational- ISRO chief SOMNATH's information.

 *Chief Minister M.K.Stalin will soon start the 'Municipal Bell' program to report complaints.

 * Shreyas Iyer, Subman Gill who scored a super century in the 2nd ODI.

 *Asian Games 2023: India won 5 medals today!
 Shooting: Ramitha 2 medals.  Rowing competition: 3 medals.
 
Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews