நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை மாணவர் சேர்க்கை: கலந்தாய்வு செப்.11 முதல் தொடங்குகிறது
நந்தனம் அரசுக் கல்லூரியில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 11-ம் தேதி முதல் தொடங்குகிறது. சென்னை நந்தனத்தில் உள்ள அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் 13 முதுநிலை பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.
தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற இந்த கல்லூரி `நாக்' குழுவின் சிறப்பு அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. 2023-24-ம் கல்வியாண்டில் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளில் சேருவதற்காக அரசின் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்தவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு செப்டம்பர் 11-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
அதன்படி விளையாட்டுப் பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு நாளையும், அறிவியல் துறை சார்ந்த முதுநிலை படிப்புகளுக்கு செப்.12-ம் தேதியும்,கலை, வணிகவியல் படிப்புகளுக்குசெப். 13-ம் தேதியும் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கான நாட்களில் சார்ந்த துறைத் தலைவர்களை காலை 8.30 மணிக்கு நேரில் சந்திக்க வேண்டும்.
வரும்போது விண்ணப்பப் படிவம், கலந்தாய்வு கடிதம், மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், 10, 11, 12-ம் வகுப்புமதிப்பெண் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானவரி சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குபுத்தக நகல் (முதல் பக்கம்), பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஆகிய ஆவணங்களை உடன் எடுத்து வரவேண்டும் என்று அந்த கல்லூரியின் முதல்வர் சி.ஜோதி வெங்கடேசுவரன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.