WhatsApp Instant Video Message அம்சத்தில் புதிய மாற்றம் - எப்படி பயன்படுத்துவது? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 09, 2023

Comments:0

WhatsApp Instant Video Message அம்சத்தில் புதிய மாற்றம் - எப்படி பயன்படுத்துவது?

அப்டேட்-க்கே அப்டேட் கொடுத்த வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் அம்சத்தில் புதிய மாற்றம் செய்யப்பட உள்ளது.

அடுக்கடுக்காக பயனர்களுக்கு அப்டேட்களை அள்ளி தெளித்து வரும் மெட்டாவின் வாட்ஸ்அப் செயலி, சமீபத்தில் இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் எனும் புதிய அப்டேட்டை அறிமுகப்படுத்தியது.

இதன்மூலம், உடனடியாக 60 வினாடிகள் வரை வீடியோ செய்திகளைப் பதிவுசெய்து அனுப்பலாம்.

அவ்வாறு பதிவு செய்யப்படும் வீடியோ மெசேஜ்கள் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் அம்சத்தில் புதிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது, ஆடியோ மெசேஜ் எவ்வாறு செயல்படுகிறதோ அதேபோல தான் வீடியோ மெசேஜையும் வாட்ஸ்அப் செயலி அறிமுகம் செய்தது.

அதன்படி, ஆடியோ மெசேஜ் பட்டனை லாங் பிரஸ் செய்தால் வீடியோ மெசேஜ்-கான ஆப்ஷன் வரும் என்ற நிலை இருந்தது.

ஆனால், ஆடியோ, வீடியோ மெசேஜ் இரண்டிற்கும் ஒரே பட்டன் என்பதால் பல பயனர்களுக்கு சிரமம் ஏற்படுவதாக புகார் தெரிவித்திருந்தநிலையில், இந்த ஆப்ஷனை டிஸ்ஏபிள் (Disable) செய்து கொள்ளும் வகையில் புதிய ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.


எப்படி பயன்படுத்துவது?

அதற்கு முதலில் வாட்ஸ்அப் சென்று வலப் புறத்தில் உள்ள மூன்று புள்ளி ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அதன்பின் செட்டிங்ஸ்-ல் இருக்கும் 'Chats' ஆப்ஷனுக்கு செல்லவும்.

அதில், இன்ஸ்டன்ட் வீடியோ மெசேஜ் என்ற ஆப்ஷன் இருக்கும்.

அதை Disable செய்தால் எளிதாக வீடியோ மெசேஜ் மற்றும் ஆடியோ மெசேஜ் என தனித்தனியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews