மாணவர்கள் இன்றி பறந்த கொடி வெறிச்சோடி போன பள்ளி முகம் வாடிய ஆசிரியர்கள்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, சுதந்திர தின விழாவை, ஏகனாபுரம் கிராம மக்கள் புறக்கணித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள், 385வது நாளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஏகனாபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை கிராம மக்கள் புறக்கணித்தனர்.
ஊராட்சி மன்றத் தலைவர் சுமதி சரவணன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
இதில், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் மட்டுமே கலந்து கொண்டனர்.
இப்பள்ளியில் பயிலும் தங்கள் குழந்தைகளை, விழாவுக்கு அனுப்பாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி தொடங்கப்பட்ட 99 ஆண்டுகளில், முதன்முறையாக மாணவ, மாணவிகளின்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.