வாக்காளர் பதிவு பணியால் பள்ளிகளில் கற்பித்தல் பாதிப்பு
வாக்காளர் விவரங்களை செயலியில் பதிவு செய்யும் பணியை, ஆசிரியர்களுக்கு வழங்கி உள்ளதால், பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டுள்ளது.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் பணியுடன், அரசு நல திட்டங்கள், வாக்காளர் பட்டியல் திருத்த பணி, வாக்காளர் விபரம் சேகரிப்பு போன்ற பணிகளும் கூடுதலாக தரப்படுகின்றன. அரசு தொடக்கக் பள்ளி ஆசிரியர்களுக்கு, வாக்காளர்களை வீடு தேடி சென்று சந்தித்து, விபரம் சேகரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் துறை செயலியில், ஒவ்வொரு வாக்காளரின் விபரங்களையும் கேட்டு பதிவு செய்ய, 45 நிமிடங்கள் ஆவதாக, அவர்கள் கூறுகின்றனர். இதனால், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் பணியை மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பனுக்கு, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் மனு அளித்துள்ளார். அதில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்காமல் இருக்க, வாக்காளர் விபரம் சேகரிப்பு பணியை இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் அல்லது வேறு துறை பணியாளர்களை கொண்டு மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்
Search This Blog
Friday, August 18, 2023
Comments:0
வாக்காளர் பதிவு பணியால் பள்ளிகளில் கற்பித்தல் பாதிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.