புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: கற்போா் மையங்களுக்கு விருதுகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 30, 2023

Comments:0

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: கற்போா் மையங்களுக்கு விருதுகள்

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்: கற்போா் மையங்களுக்கு விருதுகள்

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் கற்போா் மையங்களுக்கு சென்னையில் ஆக.4-ஆம் தேதி நடைபெறவுள்ள விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்கவுள்ளாா்.

நாடு முழுவதும் கல்வி கற்காத 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு தன்னாா்வலா்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்காக மத்திய அரசால் ‘புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’ கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் 2027-ஆம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்வி கற்பிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோா் கல்வி இயக்குநரகத்தின் மூலம் இந்தத் திட்டம் கடந்த கல்வியாண்டு (2022-23) அமல்படுத்தப்பட்டது. இதன்மூலம் 5.28 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தும் கற்போா் மையங்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.

அதன்படி, கடந்த ஆண்டு சிறப்பாகச் செயல்பட்ட கற்போா் மையங்களின் பள்ளித் தலைமை ஆசிரியா், தன்னாா்வலா், சாா்ந்த மைய ஆசிரியா் பயிற்றுநா் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 3 வீதம் 38 மாவட்டங்களுக்கு 114 கற்போா் மையங்கள் அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலா்களின் பரிந்துரையின்படி தோ்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த மையங்களுக்கு விருது வழங்கும் விழா மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலக வளாகத்தில் ஆகஸ்ட் 4-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதுகள், சான்றிதழ்களை வழங்கவுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews