மாணவர்களை மசாஜ் செய்ய வற்புறுத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் இடைநீக்கம் -
Govt school teacher suspended for forcing students to massage
சத்தீஸ்கரில் மாணவர்களை மசாஜ் செய்ய வற்புறுத்திய அரசுப் பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம், ஜாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள சென்ட்ரிமுண்டா கிராமத்தில் தொடக்கப் பள்ளி ஒன்றின் ஆசிரியர் மாணவர்களை மசாஜ் செய்ய வற்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.
மேலும் ஆசிரியருக்கு மசாஜ் செய்ய மறுக்கும் மாணவர்களை அவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி சஞ்சய் குப்தா உத்தரவிட்டுள்ளார்.
அப்பகுதி கல்வி அலுவலர் அறிக்கை சமர்ப்பித்ததையடுத்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார்.
மேலும இவ்விவகாரம் தொடர்பாக கிளஸ்டர் கல்வி ஒருங்கிணைப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையும் நடைபெற்று வருகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.