பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கூடாது கோரிக்கை ஏற்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் நம்பிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 05, 2023

Comments:0

பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கூடாது கோரிக்கை ஏற்கப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் நம்பிக்கை

IMG_20230605_211544
IMG_20230605_211608
பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கூடாது கூட்டணியின் கோரிக்கை ஏற்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் நம்பிக்கை

ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தகுதித் தேர்வு கூடாது என்று வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பிரத்தியேக கோரிக்கை மனு வழங்கப்பட்டு வருகிறது. இன்று காலையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டு விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. தகவல்களை விரிவாக கேட்டுக் கொண்ட அமைச்சர் அவர்கள் சாதகமான முடிவுகளை எடுப்பதாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறையின் முதன்மை செயலாளர் திருமதி காகர்லா உஷா ஐஏஎஸ் அவர்களை பொதுச்செயலாளர் அண்ணன் ந.ரெங்கராஜன் அவர்கள் சந்தித்து கோரிக்கை மனு வழங்கி விளக்கி கூறினார். ஆசிரியர்கள் அச்சமுடைய வேண்டாம். அரசால் தீர்க்கமான முடிவு எடுக்கப்படும். ஜூன் 15ல் வரும் வழக்கு விசாரணையில் அது தெரிவிக்கப்படும் என நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

இந்நிகழ்வின்போது மாநிலத்தலைவர் லெட்சுமி நாராயணன், மாநிலப் பொருளாளர் குமார், மாவட்டச் செயலாளர்கள் திருவாரூர் ஈவேரா, சிவகங்கை அன்பரசு பிரபாகரன், கள்ளக்குறிச்சி சீனிவாசன், மதுரை கணேசன், சென்னை மாநகர மாநில செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், சென்னை மாவட்ட மாநில செயற்குழு உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews