2004-2006 தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக மாற்றப்படும் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 05, 2023

Comments:0

2004-2006 தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக மாற்றப்படும்

TAMS மூலம் 2004-2006 தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக மாற்றப்படும்

2004ல் இடைநிலை பட்டதாரி முதுகலை ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி 1.6.2006 முதல் காலமுறை ஊதியம் பெற்றவர்களாகிய எங்களுக்கு தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக மாற்றித் தர வேண்டும் என்று

2007 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பாக நடைபெற தொகுப்பூதியம் ஒழித்து காலமுறை ஊதியம் வழங்கியமைக்கு நன்றி தெரிவிப்பு மாநாட்டில் வைத்த கோரிக்கை. தொடர்ந்து இக்கோரிக்கையை நிறைவேற்றிட வலியுறுத்தி வந்தோம்.

தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக மாற்றித் தர பலர்‌ நீதிமன்றம் சென்றனர் எவ்வித பலனும் இல்லை. 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் எவ்வித கோரிக்கையும் நிறைவேறாத சூழலில், பல ஆண்டுகளாக தொகுப்பூதிய ஆசிரியர்களே மறந்த கோரிக்கையை இன்று தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் திரு தியாகராஜன் எடுத்துள்ளார். இதன் முதல் நிகழ்வாக இன்று பணியேற்ற பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அவர்களிடம் 2004-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக மாற்றித் தர உரிய ஆவண செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளார். நிச்சயமாக 2004-2006 தொகுப்பூதிய காலத்தை பணிக்காலமாக மாற்றித் தருவார் என்ற நம்பிக்கையில் சுமார் 19 ஆண்டுகள் கழித்துவிட்டோம்.

தற்போது உகந்த ஆட்சி, நமது கோரிக்கைகளை கனிவுடன் கேட்கும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள், கோரிக்கையை எடுத்துச் சொல்ல பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இருப்பார்கள் விரைவில் 2004-2006 தொகுப்பூதிய காலம் பணிக்காலமாக மாற்றப்படும். 1.7.2024ல் நிச்சயமாக சிறப்பு நிலை பெறுவேன் எனெனில் 1.7.2004ல் மாநில தலைவர் உட்பட நானும் தொகுப்பூதியத்தில் பணியேற்றவர்கள். நம்பிக்கையுடன்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

உதுமான் அலி

மாவட்ட செயலாளர்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம்

திருச்சி மாவட்டம்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84623038