பள்ளிகளில் சுத்தம் சுகாதாரம் பேணுதல் அனைத்து வகை பள்ளிகளிலும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் - சார்பு - கூடுதல் முதன்மைக் கல்விஅலுவலர் அவர்களின் செயல்முறைகள் - நாள். 18.05.2023 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, May 18, 2023

Comments:0

பள்ளிகளில் சுத்தம் சுகாதாரம் பேணுதல் அனைத்து வகை பள்ளிகளிலும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் - சார்பு - கூடுதல் முதன்மைக் கல்விஅலுவலர் அவர்களின் செயல்முறைகள் - நாள். 18.05.2023

கூடுதல் முதன்மைக் கல்விஅலுவலர் அவர்களின் செயல்முறைகள் - நாள். 18.05.2023

பள்ளிகளில் சுத்தம் சுகாதாரம் பேணுதல் அனைத்து வகை பள்ளிகளிலும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் - சார்பு.

2023-24 ம் கல்வியாண்டு ஜூன்மாதம் 1ம்தேதி முதல் துவங்க உள்ள நிலையில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை மாணவர்கள் நலன் கருதி சுகாதாரமாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு 19.05.2023 முதல் 25.05.2023 ம் தேதிக்குள் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் தங்களது பள்ளி வளாகம், பள்ளி கட்டடங்கள், கட்டடத்தின் கூரை, வகுப்பறைகள், கழிவறைகள், மின்சார வசதிகள், குடிநீர் வசதி, குடிநீர் தேக்கத் தொட்டிகள் போன்றவற்றை பராமரித்து சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயார் நிலையில் வைத்திருக்க கேட்டுக்கொள்கிறேன். மேலும் பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் மரங்களோ அல்லது மரக்கிளைகளோ இருப்பின் வட்டாட்சியரிடம் அனுமதி பெற்று அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவும், மிகவும் பழுதடைந்த கட்டுமானங்கள் இருப்பின் தகவல் தெரிவிக்கவும், மாணவர்கள் அருகே செல்ல முடியாத நிலையில் தற்காலிகமாக தடுப்பு வேலி அமைத்திடவும் கேட்டுக்கொள்கிறேன். மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் (பொ) மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மேற்கண்ட நாட்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பள்ளிகளை கள ஆய்வு மேற்கொண்டு இப்பணியினை துரிதப்படுத்திடவும், அதற்கான ஆலோசனை வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews