தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர்களுக்கு 1 லட்சம்! கள்ளச்சாரயம் குடித்து இறந்தால் 10 லட்சம்! பலே பலே!
இயற்கைப் பேரிடர் உள்ளிட்ட எதிர்பாராத நிகழ்வுகளினால் உயிரிழப்பு ஏற்படும் நிலையில், அந்தக் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கும் வகையிலும், பொருளாதார ரீதியிலான செலவுகளுக்கு கை கொடுக்கும் வகையிலும் முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தோருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கியிருப்பது பல்வேறு சர்ச்சைகளையும், சந்தேகங்களையும் எழுப்பியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 5பேரின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் வீதமும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலைமைச்சர் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் விஷச் சாராயம் அருந்தி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கும் தலா 10 லட்சம் ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் இந்த அறிவிப்புதான் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சமீபத்தில் சேலம், கடலூர், சிவகங்கை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் நீர் நிலைகளில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்துக்கு தலா 1லட்சம் ரூபாய் மட்டுமே அரசு நிவாரண உதவி அறிவித்தது.
அதே போன்று சென்னை மடிப்பாக்கம் அடுத்த மூவரசம்பட்டு தர்மலிங்கேஸ்வரர் கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவ நிகழ்வின்போது எதிர்பாராமல் குளத்துக்குள் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு தலா 2 லட்சம் ரூபாய் வீதம் அறிவித்தது.
பொங்கல்தினத்தின் போது நடைபெற்ற வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் பங்கேற்று காளைகள் முட்டியதில் உயிரிழந்த பாலமேடு மற்றும் சூரியூர் கிராமத்தை சேர்ந்த இருவரின் குடும்பத்தினருக்கும் தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிடப்பட்டது.
ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் விடியா ஆட்சியில் காவல்துறையால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியிருப்பதோடு, அரசு தனது தவறை மறைப்பதற்காகத்தான் நிவாரண நிதியுதவி அறிவித்துள்ளதாகவும் பொதுமக்கள் ஆவேசம் தெரிவிக்கிறார்கள். இந்த அறிவிப்பின் மூலம் இனிமேல் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால், அரசே 10 லட்சம் ரூபாய் நிவாரணம் தரும் என்பதால் கள்ளச்சாராயத்தை குடிப்பதை இது ஊக்குவிக்கவே செய்யும் என்கிறார்கள். கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல, மக்களின் வரிப்பணத்தை எடுத்து இப்படி தேவையின்றி நிவாரணம் அறிவிப்பது ஏன் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விழுப்புரம் மார்க்கமாக தனது பயணத்தை அமைத்துக் கொண்ட நிலையில் முதலமைச்சர் நிவாரணத் தொகை அறிவித்திருப்பது, கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தனக்கு எதிராக கருப்புக் கொடி காட்டுவது உள்ளிட்ட எதிர்ப்புகளில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காகத்தானா என்பதும் ஸ்டாலின் மீதான பொதுமக்களின் சந்தேகமாக உள்ளது.
விடியா ஆட்சியில் கஞ்சாவை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது நாள் தோறும் டன் கணக்கில் பிடிபடும் கஞ்சாவால் வெட்டவெளிச்சமாகி உள்ளது. தற்போது கள்ளச்சாராயத்தையும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை உயிரிழப்புகள் அம்பலமாக்கியுள்ளது… இது மக்களுக்கான அரசு அல்ல… பிணம் தின்னும் அரசுதான் என்பதையே ஊர்ஜிதப்படுத்தி உள்ளது.
இது ஒரு விடியா மானங்கெட்ட அரசு
ReplyDeleteமக்களுடைய வரிப்பணத்தை குடிக்கிறவனுக்கு குடுக்கிறது வெட்டி விடியா அரசு
ReplyDeleteமுந்திரி பழத்தின் சாரில்போதை குறைவான சத்து நிறைந்த மலிவு விலை மது ஆலை தொடங்கினால் முந்திரி விவசாயம் செழிக்கும்
ReplyDeleteஆண்டிமடம் விவசாயி.