கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 09, 2023

Comments:0

கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

கோட்டை முற்றுகை போராட்டம் ஒத்திவைப்பு: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு

பழைய ஓய்வூதி யத் திட்டம் உள்படபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜியோ ஏப்.11-ஆம் ஜாக்டோக தேதி நடத்தத் திட்டமிட்டிருந்த கோட்டைமுற்றுகைபோராட் டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

தலைமைச்செயலகத்தில் அமைச்சர்களுடன் சனிக்கி ழமை நடைபெற்ற பேச்சுவார்த் தைக்குப் பிறகு இந்த அறி விப்பை ஜாக்டோ -ஜியோநிர் வாகிகள் வெளியிட்டனர்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு, தங்கம் மகேஸ் தென்னரசு, அன்பில் பொய்யாமொழி ஆகியோர் சனிக்கிழமை நடத்தியபேச் சுவார்த்தையில் ஜாக்டோ- ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில், எட்டப்பட்ட முடிவு கள் குறித்து, அமைப்பின் நிர் வாகிகளான கு.வெங்கடேசன், இரா.தாஸ்,கு.தியாகராஜன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி "
எங்களது கோரிக்கைகளின் மீதுஅமைச்சர்கள் விரிவான ஆலோசனைகளை நடத்தினர். அனைத்து கோரிக்கைகளை யும் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று தெரிவிப்ப தாக உறுதியளித்தனர். இதை ஏற்று போராட்டத்தை ஒத்தி வைக்க வேண்டுமென வேண்டு கோள் விடுத்தனர். அதன்படி, ஏப்.11-ஆம் தேதி கோட்டை முற்றுகைப் போராட்டத்தைதற் காலிகமாக ஒத்திவைக்கிறோம்.

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். மூன்று கட்ட போராட்ட அறி விப்புகளை அறிவித்தாலும், எங் களது கோரிக்கைகளை உள் வாங்கிக்கொண்டேஅவற்றை முதல்வர் பரிசீலித்து வருகிறார் என்பதை பேச்சுவார்த்தையின் போது தெரிந்து கொண்டோம். உரிய அறிவிப்புகளை இதற்கான முதல்வர் வெளியிடுவார் என்ற

நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள். ஆசிரியர் கள் நலனுக்கு எதிராக கருத்துக ளைத் தெரிவிக்கும் நிதியமைச் சரின் போக்கு அரசின் கவனத் துக்குக் கொண்டு செல்லப்பட் டுள்ளது என்று அவர்கள் தெரி வித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews