பிளஸ் 2 கணிதத்தில் தவறான கேள்வி பதில் எழுத முயற்சித்திருந்தால் 5 மதிப்பெண் வழங்கப்படும்
சென்னை, ஏப். 8: பிளஸ் 2 கணிதத் தேர்வில் குறிப்பிட்ட ஒரு கேள்விக்கு பதில் எழுத முயற்சித்திருந்தால் 5 மதிப் பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 13- ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ஆம் தேதி நிறைவு பெற் றது. இதில் பிளஸ் 2 கணிதப் பாடத்தேர்வு மார்ச் 27-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வில் 5 மதிப்பெண் வினா பகுதியில் இடம் பெற்ற 47-பி கேள்வி தவறானதாக இருந்தது. அதா வது பொருத்தமற்ற வகையில் ஒரு நீள்வட்டத்துக்கும், கோட்டுக்கும் பொதுவான பரப்பினைக் காண்க என்பது கேள்வியாகும். இதற்கு கருணை மதிப்பெண் தர வேண்டுமென ஆசி ரியர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதற்கு தேர் வுத் துறை மறுப்பு தெரிவித்துவிட்டது. இதற்கு ஆசிரி யர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பரவலாக கண்டனங் கள் எழுந்தன. தமிழக அரசின் கவனத்துக்கும் இந்த விவ காரம் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து கருணை மதிப்பெண் வழங்குவதற்கு தேர்வுத் துறை தற்போது முன் வந்துள்ளது. இதற்கான திருத்தப்பட்ட விடைக்குறிப்பில், 'பிளஸ் 2 கணிதப் பாடத்தேர்வில் 5 மதிப்பெண் வினாவில் இடம்பெற்ற தவறான 47-பி கேள்வியை மாணவர்கள் எழுத முயற்சி செய்திருந்தாலே முழு மதிப்பெண் வழங்க வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.