இளநிலை CUET தேர்வுக்கு 14 லட்சம் விண்ணப்பங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 05, 2023

Comments:0

இளநிலை CUET தேர்வுக்கு 14 லட்சம் விண்ணப்பங்கள்

இளநிலை க்யூட் தேர்வுக்கு 14 லட்சம் விண்ணப்பங்கள் - 14 lakh applications for junior CUET examination

மத்திய பல்கலையில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கான, 'க்யூட்' நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு, 14 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக,யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.

மத்திய பல்கலை மற்றும் அதன் கீழ் செயல்படும் கல்லுாரிகளில் சேருவதற்கு, 'க்யூட்' நுழைவுத் தேர்வு எழுதுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானிய குழுவின் தலைவர் ஜகதீஷ் குமார் கூறியதாவது:

இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, அடுத்த மாதம் 21 - 31ம் தேதிகளில் நடக்கவுள்ளது.

இந்த தேர்வுக்கு 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கடந்தாண்டை விட, இந்தாண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தோர் எண்ணிக்கை, 41 சதவீதம் அதிகரித்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு அடுத்தடுத்த இடங்களில் புதுடில்லி, பீஹார் மாநிலங்கள் உள்ளன. டில்லி பல்கலை, பனாரஸ் ஹிந்து, அலகாபாத் ஆகிய பல்கலைகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். க்யூட் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்கும் கல்லுாரிகளின் எண்ணிக்கையும் இந்தாண்டு அதிகரித்துள்ளது.

கடந்தாண்டு 90 கல்லுாரிகள் மட்டுமே இந்த தேர்வில் பங்கேற்றன. தற்போது, இதில் 242 கல்லுாரிகள் இணைந்துள்ளன. இந்தாண்டு, 74 வெளிநாடுகளைச் சேர்ந்த 1,000 மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews