பிளஸ் 2 மாணவர்களுக்கான கல்லூரி சுற்றுலாவில் 5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பார்கள்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை பெற வசதியாக கல்லூரிகளுக்கே நேரடியாக இன்று சுற்றுலா அழைத்து செல்லப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் இயங்கும் சுமார் 3193 மேனிலைப் பள்ளிகளில் படிக்கின்ற 5 லட்சம் பிளஸ் 2 மாணவர்கள் தற்போது பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இவர்கள் அடுத்த நிலையில் உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்று நோக்கில் பள்ளிக் கல்வித்துறை உறுதியாக இருக்கிறது. இற்காக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 2023, பிப்ரவரி 27ம் தேதியான இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் அனைவரும் அவர்கள் படிக்கின்ற பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று உயர்கல்வி வாய்ப்புகளை கண்டறியும் வகையில் கல்லூரிச் சுற்றுலா செல்ல இருக்கின்றனர். அந்தந்தக் கல்லூரிகளில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்களின் ஏற்பாட்டில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் அரசுப் பள்ளி மாணவர்களை வரவேற்று அவர்களுக்கு உதவி செய்வார்கள். கல்லூரிகளில் உள்ள உயர்கல்வி வகுப்புகள் ஆய்வக வசதிகள், தங்களின் கல்லூரி அனுபவங்கள் என அனைத்தையும் விவரிப்பார்கள்.
இந்த கல்லூரிச் சுற்றுலாவை முன்னிட்டு 26ம் தேதி மாலையில் கோவை பிஎஸ்ஜி கல்லூரிக்கு வந்த மாணவர்களுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடினார். இந்த கல்லூரிச் சுற்றுலாவில் பங்கேற்கும் மாணவர்கள் பொதுத் தேர்வுகள் எழுதிய பிறகு அவர்கள் விரும்பிய அந்த கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பும் உருவாகும் என்று எதிர்பார்க்கலாம்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.