சர்வதேச அளவில் கராத்தே போட்டியில் முதலிடம்- தஞ்சை 3-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவன் சாதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 15, 2023

Comments:0

சர்வதேச அளவில் கராத்தே போட்டியில் முதலிடம்- தஞ்சை 3-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவன் சாதனை



சர்வதேச அளவில் கராத்தே போட்டியில் முதலிடம்- தஞ்சை 3-ம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவன் சாதனை - 1st in International Karate Competition - Achievement of Tanjore 3rd Class Govt

தஞ்சையைச் சேர்ந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவன் கராத்தே, மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று பல கோப்பைகளை பெற்று வரும் நிலையில் சர்வதேச அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளான்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரைத் தலைவராக கொண்டு செயல்பட்டு வரும் சத்திரம் நிர்வாகம் அரசர் தொடக்கப் பள்ளியில் சுமார் 195 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.. இப்பள்ளியில் பயின்று வரும் குழந்தைகள் அனைவரும் பல விதமானவிளையாட்டு போட்டிகளில் பங்கேற்று அவ்வபோது பல பரிசுகளையும் பெற்று வருகின்றனர். அந்த வகையில் இப்பள்ளியில்மூன்றாம் வகுப்பு பயின்று வரும் மாணவன் சாய்சரண் விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ள இந்த க்யூட் குட்டிமாணவனுக்குசிறு வயதிலேயே உதித்த விளையாட்டு மேல் உள்ள நீங்கா காதலால் தஞ்சை மாவட்டத்தில் எங்கு மாரத்தான், கராத்தே போன்ற விளையாட்டுபோட்டிகள் நடந்தாலும் அங்கு முதல் ஆளாக பங்கேற்று பதக்கம் மற்றும் கோப்பைகளையும் ஷீல்டுகளையும் வென்று அசத்தியுள்ளார் இந்த அரசு பள்ளி மாணவன்.

அது மட்டுமல்லாமல் சென்னையில் நடைபெற்ற இன்டர்நேஷனல் கராத்தே போட்டியில் முதலிடமும் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கராத்தே போட்டியில் முதலிடம் பெற்று தன் பெற்றோருக்கும், தஞ்சை மாவட்டப்பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மேலும் இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் அனைவரும் யோகா, சிலம்பம் போட்டிகளில் வெற்றி பெற்று பல பரிசுகளையும் குவித்துள்ளனர்.இந்த தொடக்கப் பள்ளியில் 195 மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்களின் அனைத்து திறன்களையும் வெளிக்கொணர்ந்து சிறந்த மாணவர்களை உருவாக்குவதே எங்கள் கடமை என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் குமார் தெரிவித்தார். மேலும் கராத்தே போட்டிகளில் பங்கு பெற செய்து வழிநடத்திய பயிற்சியாளர் சத்யா மற்றும் பயிற்சி பள்ளியின் ஆசிரியர் பொய்யாமொழி கூறுகையில், ‘இந்த மாணவன் சாய்சரண் கடந்த 6 மாதத்திலேயே பலசாதனைகளை படைத்து உள்ளான்‌.அவன் முதல் நாள் பயிற்சி பெற வரும் போதே கணித்தோம் இவனுக்கு விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளது என்று. மேலும் மிகப்பெரிய சாதனைகளைமாணவன் படைப்பான் என்று கூறினார்கள்.

அரசர் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கூறுகையில், ‘எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு நிகராக மாணவிகளும் சிலம்பம், கராத்தேமற்றும் பல போட்டிகளில் பரிசுகளை குவித்துள்ளனர் என்றும் பெருமிதம் கூறினார்.

வரும் கல்வி ஆண்டு முதல 6 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம், பள்ளி வளாகத்தில் புதிய பொலிவுடன் ஸ்மார்ட் கிளாஸ் கொண்ட வகுப்பறைகள் மற்றும் மாணவர்கள் விளையாட நவீனபுதிய அம்சங்களுடன் செயல்படவும் தயாராகி வருகிறது என்றும் தலைமை ஆசிரியர் கூறினார்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews