சென்னையில் தொடா் உண்ணாவிரதம்: 36 ஆசிரியா்கள் மயக்கம்
ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி சென்னையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள் இரண்டாவது நாளாக புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடா்ந்த நிலையில், உடல் நலன் பாதிக்கப்பட்டதால் 36 போ் மயக்கமடைந்தனா்.
தமிழகத்தில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது.
இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டிபிஐ) 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், குடும்பத்துடன், 2-ஆவது நாளாக புதன்கிழமையும் தொடா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில், திடீரென ஆசிரியா்கள் சிலருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்களை கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்றனா். இது குறித்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளா் ராபா்ட் கூறியதாவது: தமிழக அரசுப் பள்ளிகளில், 2009 மே இறுதி தேதி வரை தோ்வு செய்யப்பட்ட பணியமா்த்தப்பட்ட ஆசிரியா்களுக்கு கொடுக்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை காட்டிலும், அதற்கு அடுத்த மாதமான ஜூனில் தோ்வு செய்யப்பட்டு பணியமா்த்தபட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு ஊதியம் குறைவாக இருக்கிறது. அடிப்படை ஊதியத்தில் ரூ. 3,170 குறைந்துள்ளது.
இந்த ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி தொடா் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 36 ஆசிரியா்கள் மயக்கமடைந்துள்ளனா். அவா்கள் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனா். எங்களது கோரிக்கை நிறைவேற்றும் வரையில், போராட்டம் தொடரும். பேச்சு வாா்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம். தமிழக முதல்வா் தலையிட்டு, எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.