அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவ இடங்கள்: மத்திய அரசிடம் வலியுறுத்த தமிழகம் முடிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 24, 2022

Comments:0

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவ இடங்கள்: மத்திய அரசிடம் வலியுறுத்த தமிழகம் முடிவு

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவ இடங்கள்: மத்திய அரசிடம் வலியுறுத்த தமிழகம் முடிவு

அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாத மருத்துவ இடங்களை மீண்டும் தமிழகத்துக்கே ஒப்படைக்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,050 எம்பிபிஎஸ் இடங்கள், 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன. அவற்றை மத்திய மருத்துவக் கலந்தாய்வு குழு நிரப்பி வருகிறது. கலந்தாய்வுக்குப் பிறகு மீதமாகும் இடங்களை மாநில அரசிடமே ஒப்படைப்பது வழக்கம்.

ஆனால், கடந்த ஆண்டில் அந்த நடைமுறை மாற்றியமைக்கப்பட்டது. இறுதி வரை அந்த இடங்கள் ஒப்படைக்கப்படாததால், கடந்த ஆண்டு தமிழகத்தில் 24-க்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படாமல் வீணாகின. அதுதொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, பின்னா் அவை நிரப்பப்பட்டன.

இந்தச் சூழலில், பழைய நடைமுறைப்படி, நிரப்பப்படாத இடங்களை மீண்டும் மாநிலங்களுக்கு ஒப்படைக்குமாறு தமிழகம் வலியுறுத்தி வருகிறது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறுகையில், அடுத்த மாதத்தில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை தமிழக அரசு சாா்பில் சந்திக்க தில்லி செல்ல உள்ளோம். அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் விவகாரம் குறித்து பேசப்படும். நிரம்பாத இடங்களை மீண்டும் தமிழகத்துக்கு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுப்போம் என்றாா் அவா்

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews