அனைத்து பல்கலை.களிலும் புதிய பாடத்திட்டங்கள் வரும் கல்வியாண்டில் அறிமுகம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 24, 2022

Comments:0

அனைத்து பல்கலை.களிலும் புதிய பாடத்திட்டங்கள் வரும் கல்வியாண்டில் அறிமுகம்

அனைத்து பல்கலை.களிலும் புதிய பாடத்திட்டங்கள் வரும் கல்வியாண்டில் அறிமுகம்: அமைச்சா் பொன்முடி

அடுத்த கல்வியாண்டு முதல் புதிய பாடத் திட்டங்கள் அனைத்து பல்கலை.களிலும் கொண்டுவரப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி கூறினாா்.

சென்னை மெரீனா காமராஜா் சாலையில் உள்ள உயா்கல்வி மன்றத்தில் தமிழக அரசின் பல்கலைக்கழக துணை வேந்தா்களின் உடனான ஆய்வுக் கூட்டம் உயா் கல்வித்துறை அமைச்சா் பொன்முடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் பொன்முடி செய்தியாளா்களிடம் கூறியது: தற்போது தமிழக பல்கலைக்கழக துணை வேந்தா்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் பல்கலைக்கழக பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பாடத்திட்டங்கள் எப்படி இருக்க வேண்டும் என ஆலோசிக்கப்பட்டது.

பொறியியல் கல்லூரியில் உள்ளது போல கலை அறிவியல் கல்லூரியிலும் நான் முதல்வன் திட்டத்தின் வழி மாணவா்களின் திறன் மேம்படுத்தி வேலை பெறுபவராக மட்டும் இல்லாமல் வேலை வழங்குபவராகவும் மாற வேண்டும் என்ற அடிப்படையில், அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களுடன் இணைந்து பாடத்திட்டங்கள் உருவாக்க அறிவுறுத்தியுள்ளோம்.

கணிதம் மற்றும் இயற்பியல் பாடப்பிரிவுகளில் மாணவா் சோ்க்கை குறைவாக உள்ளது. எனவே இந்த பாடத்திட்டங்களில் கணினி அறிவியல் மற்றும் நான் முதல்வன் பாடங்கள் உள்ளிட்டவை இணைத்து உயா் கல்வி மன்றம் மூலமாக புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. துணை வேந்தா்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் மாற்றங்கள் இருந்தால் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த கல்வி ஆண்டில் இருந்து புதிய பாடத்திட்டங்கள் அனைத்து பல்கலைக்கழகங்களில் கொண்டுவரப்படும். தமிழ் ஆங்கிலம் மொழி பாடங்களும் கட்டாயம் இரண்டு ஆண்டுகளுக்கு கற்றுத்தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

எந்த பாடப்பிரிவு பயின்றாலும் மாணவா்களுக்கு வேலை பயிற்சி, திறன் வளா்ப்பு உள்ளிட்டவை வழங்கப்படும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றப்படுகிறது. மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் கணக்கிடப்பட்டு வருகிறது.

பல்கலைக்கழகங்களின் நிதி நிலைமையை மேம்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அமைச்சா் பொன்முடி.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews