அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு!
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி 34 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 4 சதவீதம் உயர்த்தி 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவது வழக்கம்.
அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த அகவிலைப்படி உயர்த்தி வழங்குவது நடைமுறையில் இருந்து வருகிறது. தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி நிதித்துறை துணை செயலளர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 7 ஆவது ஊதியக்குழு பரிந்துரையின்படி, தற்போது அடிப்படை ஊதியம்/ஓய்வூதியத்தில் 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆா்) 4 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. 34 சதவீதமாக இருத்த அகவிலைப்படி, மேலும், 4 சதவீதம் உயர்த்தி, 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதியைக் கணக்கிட்டு, வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 21 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
‘புதுச்சேரி அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வால் ஆண்டுக்கு ரூ.54 கோடி கூடுதல் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த அகவிலைப்படி உயர்வு அனைத்து அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பகுதிநேர ஊழியர்களுக்கு பொருந்துமா என்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.