திருக்குறள் :
பால்: பொருட்பால்
அதிகாரம்: நல்குரவு
குறள் 1044:
இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும்.
பொருள்:
வறுமை என்பது, நல்ல குடியிற் பிறந்தவரிடத்திலும் இழிவு தரும் சொல் பிறப்பதற்குக் காரணமான சோர்வை உண்டாக்கி விடும்.
பழமொழி :
A good tongue is a great weapon.
நல்ல வார்த்தைகள் ஒரு சிறந்த ஆயுதம்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. தோல்வி வெற்றியின் முதல்படி எனவே தோல்வியை கண்டு அஞ்சி ஓடாமல் துணிந்து முயன்று வெற்றி பெற முயல்வேன்.
2. ஆகாத பேச்சுகள் நல் ஒழுக்கத்தை கெடுக்கும் எனவே தேவையில்லாத பேச்சுகளை தவிர்ப்பேன்
பொன்மொழி :
எவன் ஒருவன் தன் அறிவின் அகந்தையால் பிறரை அவமதிக்கிறானோ, அவன் மந்த புத்தியுடையவன்!
பொது அறிவு :
1.காந்தியை முதன் முதலில் தேசப்பிதா என்று அழைத்தவர் யார்?
நேதாஜி .
2.முதல் இரும்பு கப்பலை செய்தவர் யார்?
வில்கின்சன்.
English words & meanings :
Cho-ke - become unable to breathe when something stuck in the throat or you cannot breathe, verb. மூச்சடைக்கப்படுதல், வினைச் சொல். The flowers were choked by the weeds
ஆரோக்ய வாழ்வு :
அத்திப் பழத்தில் கொழுப்புச் சத்துக்கள் எதுவும் கிடையாது. கொலஸ்டிரால் இல்லாத, அதேசமயம் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்றாக இந்த அத்திப் பழம் இருக்கிறது. இதில்,
வைட்டமின் ஏ,
வைட்டமின் சி,
கால்சியம்,
இரும்புச்சத்து,
பொட்டாசியம்,
மக்னீசியம்
ஆகியவை அதிக அளவில் நிறைந்திருக்கின்றன.
NMMS Q 51:
லீலாவதி என்னும் நூலை இயற்றியவர் யார்?
விடை : பாஸ்கராச்சாரியார்.
நீதிக்கதை
தேவதை கொடுத்த பரிசு
ஒரு கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் மதன். மற்றவன் பெயர் குணா. இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர். அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.
நண்பனே! இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத்திற்கும் போதிய உணவுப்பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம் என்றான் குணா.
அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே. நீயே எடுத்துக்கொள் என்றான் மதன். இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் குணா.
இல்லை நண்பனே, இல்லை கண்டிப்பாக நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தை வறுமையில் தவிக்க நான் என்றுமே விடமாட்டேன், என்று அழுத்தமாகக் கூறினான் மதன். ஒருவரையொருவர் இவ்வாறு விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கே கடற்கரையில் ஓர் அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள்.
அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் திகைப்புடன் வாயடைத்துப் போயினர். அந்தப் பெண் தேவதை போன்று காட்சி தந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை இருவரும் உற்றுப் பார்த்தனர். மீனவர்களே, என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்! நான்தான் இந்தக் கடலில் வசிக்கிற கடல் தேவதை. நீங்கள் இருவரும் ஏதோ வழக்கு நடத்திக் கொண்டிருப்பது போன்று தெரிகிறது. அது என்னவென்று அறிந்துகொள்ள வேண்டியே உங்கள் அருகில் வந்தேன், என்றாள் கடல் தேவதை.
தேவதையே! உன்னை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இருவரும் பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன. என் குடும்பம் வறுமையில் வாடும், அதனால் மீன்களை எடுத்துக்கொள் என்கிறான் என் நண்பன்.
என் குடும்பத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவன் குடும்பம் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்தான் எல்லா மீன்களையும் விற்று கிடைக்கிற பணத்தை என் நண்பன் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்கிறேன். என் நண்பனோ, அதனை மறுத்து என்னை எடுத்துக்கொள்ளும்படியாகச் சொல்கிறான். நீயே அவனுக்கு எடுத்துக் கூறி அவன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்று! என்றான் குணா.
கடல் தேவதையோ சிரித்தபடியே இருவரையும் நோக்கியது. நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் உங்கள் குடும்ப நலன் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும், உங்கள் நல்லெண்ணமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் உங்கள் இருவருக்கும் உதவி புரியவே வந்துள்ளேன் என்றது கடல் தேவதை.
பிறகு, மதன் முன்பும், குணா முன்பும் இரண்டு மூட்டைகள் தோன்றின. கடல் தேவதையும் அங்கிருந்து மறைந்தாள். இருவரும் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அந்த மூட்டைகளில் நிறையப் பொற்காசுகள் காணப்பட்டன. இருவருமே அதனை தங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நினைத்துக் கொண்டனர். அதைக் கொண்டு பெரிய பணக்காரர்கள் ஆனார்கள்.
இன்றைய செய்திகள்
01.09.22
* கிருஷ்ணகிரி அணையில் இருந்து 14,618 கனஅடி நீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
* தமிழகத்தில் இன்று முதல் கொள்முதல் நிலையங்களில் சாதாரண ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,115, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,160 என்ற வீதத்தில் கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
* “பட்டியலின மற்றும் பழங்குடியின மகளிருக்கு சுய தொழிலை ஊக்குவிக்கும் வகையில் 100 சதவீத மானியத்தில் சக்தி இ-ஆட்டோ வழங்கப்படும்” என்று புதுச்சேரி மாநில போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா கூறியுள்ளார்.
* தமிழகத்தில் 4 நாட்களுக்கு பரவலாக மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 15.3 சதவீதம் உயர்வு - 2021-ல் 4.28 லட்சம் வழக்குகள் பதிவு என்று தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை கூறியுள்ளது.
* ஆப்கனில் பஞ்சம் காரணமாக 60 லட்சம் பேர் பாதிக்க வாய்ப்பு - ஐ.நா. உயர் அதிகாரி எச்சரிக்கை.
* சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் நகரத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அதிகாரிகள் நேற்று மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டனர்.
* ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
* ஆசிய கைப்பந்து போட்டி: இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம்.
* அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி.
* இந்தியாவில் நடைபெறும் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் வீடியோ உதவி நடுவர் முறை அறிமுகம்.
Today's Headlines
* Release of 14,618 cubic feet of water from Krishnagiri Dam: Flood warning for coastal people.
* In Tamil Nadu, the Chief Minister has ordered the purchase of normal paddy at the rate of Rs.2,115 per quintal and Rs.2,160 per quintal of light paddy from today.
* Puducherry State Transport Minister Chandra Priyanka has said that Shakti e-Auto will be provided with 100 per cent subsidy to encourage self-employment for Scheduled Caste and Tribal women.
* The Chennai Meteorological Center has informed that there is a possibility of widespread rain and heavy rain at some places for 4 days in Tamil Nadu.
* Crimes against women rise 15.3 per cent - 4.28 lakh cases in 2021, says National Crime Records Bureau report.
* 60 lakh people likely to suffer due to famine in Afghanistan - UN Higher authority warning.
* As a precautionary measure in connection with the Chi
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.