4000 உதவி பேராசிரியர்கள் கல்லூரிகளில் நியமிக்க முடிவு - 10 நாட்களில் அறிவிப்பு - Decision to appoint 4000 assistant professors in colleges - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, September 24, 2022

Comments:0

4000 உதவி பேராசிரியர்கள் கல்லூரிகளில் நியமிக்க முடிவு - 10 நாட்களில் அறிவிப்பு - Decision to appoint 4000 assistant professors in colleges

4000 உதவி பேராசிரியர்கள் கல்லூரிகளில் நியமிக்க முடிவு - Decision to appoint 4000 assistant professors in colleges
''அரசு கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பதவிகளில், 4,000 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு, 10 நாட்களில் வெளியிடப்படும்,'' என, உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:கடந்த, 2012ல் நியமிக்கப்பட்ட, 955 அரசு கல்லுாரி ஆசிரியர்கள், அவர்களின் பயிற்சி காலத்தை தவிர மற்ற ஆண்டுகளுக்கு, பணி வரன்முறை செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும், அரசு பல்கலைகளின் கீழ் செயல்பட்ட, 41 உறுப்பு கல்லுாரிகள், அரசு கல்லுாரிகளாக மாற்றப்படும் என, கடந்த ஆட்சியில் அறிவித்தாலும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.தற்போது, அரசு கல்லுாரிகளாக மாற்றப்பட்ட கல்லுாரிகளின் செலவினத்துக்கு, அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கு பணியாற்றுவோருக்கு உயர் கல்வி துறை வழியாக ஊதியம் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 4,000 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான நியமன அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., 10 நாட்களில் வெளியிடும்.இதில் தேர்ச்சி பெற்று, நேர்முக தேர்வுக்கு தகுதி பெறும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு, விதிகளுக்கு உட்பட்டு சலுகை அளிக்கப்படும்.

அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் பதவிக்கு, 1,030 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விரைவில், பணி நியமன ஆணை வழங்க உள்ளார்.அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் காலியாக உள்ள இளநிலை படிப்புக்கான இடங்களுக்கு, 'வராண்டா அட்மிஷன்' முறையில் மாணவர் சேர்க்கை நடக்கும்.கவுரவ விரிவுரையாளர் காலி பணியிடங்கள், இதுவரை கல்லுாரிகளில் நேரடியாக நிரப்பப்பட்டன. இனி, கல்லுாரி கல்வி இயக்குனரகத்தின் மண்டல அலுவலகங்கள் வழியாக நிரப்பப்படும்.இவ்வாறு பொன்முடி கூறினார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews