11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் வகைகள் (Type of Questions) குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 08, 2022

Comments:0

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வில் கேட்கப்படும் வினாக்களின் வகைகள் (Type of Questions) குறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் விளக்கம்!

அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை-6

01.10.2022 அன்று நடைபெறவிருக்கும் தமிழ் மொழி இயக்கியத் திறளறித் தேர்வு தற்போது பதினோராம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்காக ஊக்கத்தொகை பெறும் பொருட்டு 2022–23 ஆம் கல்வியாண்டு முதல் நடத்தப்படுகிறது.

மேற்படி தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பு 100 வினாக்களைக் கொண்டிருக்கும். அனைத்து வினாக்களும் கொள்குறி வினாக்களாக அமையும். ஒவ்வொரு சரியான விடைக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். மேற்படி விளாக்கள் பத்தாம் வகுப்பு நிலையின் அடிப்படையின் அமையப்பெறும். இலக்கணம், அற இலக்கியம், சங்க இலக்கியம், தற்கால இலக்கியம், உரைநடை மற்றும் துணைப்பாடம் ஆகிய தலைப்புகளிலிருந்து சரியான விகடயை தேர்ந்தெடுத்தல், பொருத்துக, பொருந்தாத இணைபயைத் தேர்ந்தெடுத்தல், சரியான/தவறான கூற்றைத் தேர்ந்தெடுத்தல், கூற்று/காரணம் விளாக்கள் போன்ற வினாக்கள் கேட்கப்படும் மேற்படி தேர்வில் தேர்ச்சியுற்று தேர்ந்தெடுக்கப்படும் 1500 தேர்வர்களுக்கு மாதம் ரூ.1500/- வீதம் இரண்டாண்டுகளுக்கு உதவித் தொகை தமிழ் வளர்ச்சித் துரை வாயிலாக வழங்கப்படவுள்ளது.

பேற்படி தேர்விற்கு, அரகப் பள்ளி! அரசு உதவி பெறும் பள்ளி / தனியார் பள்ளி / CHSEASE பள்ளிகள் சார்ந்த மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கவும்.

09.09.2022 அன்று இத்தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி நாளாகும். எனவே, மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி தேர்விற்கு விண்ணப்பித்து தேர்வெழுதி ஊக்கத் தொகை பெற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews