TNSED ஆப் மூலம் வருகைப்பதிவு... செயலியைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, August 01, 2022

Comments:0

TNSED ஆப் மூலம் வருகைப்பதிவு... செயலியைப் பற்றி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

அவர்கள் பள்ளியில் இருந்து தான் வருகையை பதிவு செய்கின்றனர் என்பதை உறுதி செய்ய, லொகேஷனை உறுதி செய்து கண்காணிக்கும் வசதியும் செயலியில் உள்ளது

தமிழ்நாட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை, செல்போன் செயலி மூலம் பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை செல்போன் செயலி மூலம் உறுதி செய்வது செயல்பாட்டில் இருந்தாலும், அது கட்டாயமாக இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் 1 முதல் செல்போன் செயலி மூலமான வருகைப்பதிவேடு கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது.

அதன்படி, TNSED எனப்படும் செயலியை கொண்டு அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை உறுதி செய்யும் திட்டம் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அந்த செயலியில், தலைமையாசிரியர் முன்னிலையில் ஆசிரியர் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

தொடர்ந்து மாணவர்களுக்கு வகுப்பாசிரியர்கள் செயலி மூலம் வருகை பதிவேடு எடுக்கின்றனர். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் முறையாக பள்ளிக்கு வராமல் வருகைப் பதிவேட்டை பதிவு செய்வதாக, பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. TNSED செயலி:

TNSED எனப்படும் அந்த செயலியில் அனைத்து மாணவர்களின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு மாணவரின் பெயருக்கு எதிரே வருகையை குறிக்கும் P எனும் எழுத்தும், விடுப்பை குறிக்கும் A எனும் எழுத்தும் இடம்பெற்றுள்ளது.

மாணவர்களின் வருகையை உறுதி செய்துகொண்டு அதில் ஏதேனும் ஒரு பொத்தானை அழுத்தி விட்டு, திரையின் அடியில் தோன்றும் SAVE AND SYNCHRONIZE எனும் பொத்தானை அழுத்த வேண்டும்.

இதையடுத்து திரையில் ஆரஞ்சு நிறம் தோன்றி அது பச்சை நிறத்திற்கு மாறி, வருகைப்பதிவேடு முற்றிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது உறுதி செய்யப்படுகிறது.

இதேமுறையிலேயே, ஆசிரியர்களும் தங்களது வருகையை தலைமை ஆசிரியரிடம் பதிவு செய்ய வேண்டும்.

அவர்கள் பள்ளியில் இருந்து தான் வருகையை பதிவு செய்கின்றனர் என்பதை உறுதி செய்ய, லொகேஷனை உறுதி செய்து கண்காணிக்கும் வசதியும் செயலியில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews