School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2022 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, August 30, 2022

Comments:0

School Morning Prayer Activities - பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2022


 திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:குடியியல்

அதிகாரம்: நல்குரவு

குறள் : 1043
தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

பொருள்:
ஒருவனுக்கு வறுமையின் காரணமாகப் பேராசை ஏற்படுமேயானால், அது அவனுடைய பரம்பரைப் பெருமையையும், புகழையும் ஒரு சேரக் கெடுத்துவிடும்

பழமொழி :

Necessity is the mother of invention

தேவையே கண்டுபிடிப்பின் தாய்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தோல்வி வெற்றியின் முதல்படி எனவே தோல்வியை கண்டு அஞ்சி ஓடாமல் துணிந்து முயன்று வெற்றி பெற முயல்வேன். 

2. ஆகாத பேச்சுகள் நல் ஒழுக்கத்தை கெடுக்கும் எனவே தேவையில்லாத பேச்சுகளை தவிர்ப்பேன்

பொன்மொழி :

தம்மால் வெல்ல முடியும் என்று நம்புகிறவர்கள் தான் வெற்றிகளைக் குவிப்பார்கள்!

பொது அறிவு :

1.ஆழ்கடல் செல்பவர் எடுத்துச் செல்லும் வாயு எது? 

 ஆக்ஸிஜன் .

 2.தென்னிந்தியாவின் உயரமான சிகரம் எது? 

 ஆனைமுடி.

English words & meanings :

bedraggled - wet or drenched and untidy. Adjective. மிகுதியான ஈரத்தோய்வுடன் மாசு படிந்த. பெயரளபடை 

ஆரோக்ய வாழ்வு 

பழங்களில் அத்தியை சூப்பர் ஃபுட்ஸ் என்று சொல்கிறார்கள். அத்திப் பழத்தை ஃபிரஷ்ஷாகவோ அல்லது உலர்ந்த நிலையிலோ சாப்பிடலாம். அத்திப்பழம் சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமின்றி நிறைய மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கின்றன

NMMS Q 50:

ஓர் எண்ணை மூன்று முறை பெருக்கக் கிடைப்பது __________ எனப்படும்.

விடை : கனம்

நீதிக்கதை

இரண்டு மரம்

ஒரு ஆற்றங்கரையில் இரண்டு பெரிய மரம் இருந்தது. அந்த வழியாக வந்த ஒரு சிட்டு குருவி, மரத்திடம் கேட்டது. மழை காலம் தொடங்க இருப்பதால், நானும் என் குஞ்சிகளும் வசிக்க கூடு கட்ட அனுமதிக்க முடியுமா? என்றது. முதலில் இருந்த மரம் முடியாது என்றது. அடுத்த மரத்திடம் கேட்டது அது அனுமதித்தது.

குருவி கூடு கட்டி சந்தோசமாக வாழ்ந்து கொண்டு இருந்தது. ஒரு நாள் பலத்த மழை ஆற்றில் வெள்ளம் வந்து முதல் மரத்தை அடித்து சென்றது. தண்ணீரில் இழுத்து செல்லும் பொழுது குருவி சிரித்து கொண்டே சொன்னது, எனக்கு வசிக்க கூடு கட்ட இடம் இல்லை என்று சொன்னதால் இப்போது தண்ணீரில் அடித்து செல்லப்படுகிறாய் என்றது.

அதற்கு மரம் கூறிய பதில் எனக்கு தெரியும் நான் *வலுவிழந்து* விட்டேன். எப்படியும் இந்த மழைக்கு நான் தாங்க மாட்டேன். தண்ணீரில் அடித்து செல்லபடுவேன். நீயும் உன் குழந்தைகளும் நல்ல வாழ்க்கையை வாழ வேண்டும் என்று தான் உனக்கு இடம் இல்லை என்றேன். மன்னித்து விடு என்றது.

நீதி :
உங்களை யாரும் நிராகரித்தால் தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.

இன்றைய செய்திகள்

30.08.22

 🌸 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்வழங்கும் திட்டம் வரும்
செப்., 5 ம் தேதி துவக்கிவைக்கப்படுகிறது துவக்க விழாவில்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்

🌸 கல்வி காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க 800 நடமாடும் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

🌸 தமிழகத்தில் நீலகிரி, கோவை உட்பட 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

🌸திருவண்ணாமலை : சாலையில் கிடந்த மணிபர்சை காவல்துறையினரிடம் ஒப்படைத்த வாலிபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

🌸கேரளாவில் ஆண்டுதோறும் 10 நாள் மலையாள அறுவடைத் திருவிழாவான ஓணம் கொண்டாடப்படும். இந்த ஆண்டு அந்த திருவிழா ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 8 வரை நிகழ்த்தப்பட உள்ளது

🌸 நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அனைவருக்கும் வேலை என்பது அல்ல, அனைவருக்கும் தகுதியான வேலை என்பதே தமிழக அரசின் இலக்கு என்று முதல்வர் மு.க. கூறியுள்ளார்

Today's Headlines

 🌸 The scheme of giving 1000 rs/month college students will come into effect from September 5th. For the Inauguration of the programme Delhi Chief Minister Arvind Kejriwal will be the special guest.
 
 🌸 The Tamil Nadu government has informed that 800 mobile medical teams have been set up to provide counseling to students who are under stress due to education and exams. 

 🌸 According to Meteorological Department, 17 districts of Tamil Nadu including Nilgiris and Coimbatore are likely to experience heavy rain today.

 🌸 Thiruvannamalai: Many people are praising the youth who handed over the money bag lying on the road to the police.

 🌸Onam, a 10-day Malayalam harvest festival, is celebrated annually in Kerala.  This year the festival will be held from August 30 to September 8.

 🌸 Chief Minister M.K.STALIN said that under the Nan Muthalvan scheme, the goal of the Tamil Nadu government is not to have jobs for all, but to have appropriate jobs for all.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews