போதை பொருட்களுக்கு எதிராக; அரசு பள்ளியில் விழிப்புணர்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 06, 2022

Comments:0

போதை பொருட்களுக்கு எதிராக; அரசு பள்ளியில் விழிப்புணர்வு

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், செல்டர் அறக்கட்டளை மற்றும் காவல்துறை இணைந்து போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். ஒவ்வொரு போதை பொருட்களை பயன்படுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அதனைத் தொடர்வதால் உடலில் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. உணவு பொருட்களில் கலந்து விற்கப்படும் போதைப் பொருட்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில் தேசிய போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு நுண்ணறிவு அதிகாரி சங்கரசுப்பிரமணியன், எம்கேபி. நகர் உதவி கமிஷனர் தமிழ்வாணன், செல்டர் அறக்கட்டளை நிறுவனர் சாலமன் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அரசு பள்ளி மாணவர்கள் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு போதை பொருட்களையும் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews