Breaking

Thursday, July 14, 2022

மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு - நடைமுறை சிக்கல்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி.-மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை ஆவணமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டி.என்.பி.எஸ்.சி.-மதிப்பெண் மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க கோரிய வழக்கில் அரசியல் நடைமுறை சிக்கலை ஆவனமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளியில் பதவி உயர்வு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டி.என்.பி.எஸ்.சி.-ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவதில் நடைமுறை சிக்கல் இருப்பதாக கூறிப்பிட்டார். எனவே நீதிமன்றமே ஒரு வரையறையை வகுக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

இதனை கேட்ட நீதிபதிகள் இந்த வழக்கில் பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் அனைத்து மனுதாரர்களும் தாங்கள் கோரும் நிவாரணத்தை ஒரே ஆவணமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதை போன்று அரசு தரப்பில் உள்ள நடைமுறை சிக்கல் மற்றும் தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் ஒரே ஆவணமாக தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும் இந்த வழக்கை ஆகஸ்ட் மாதம் 24 ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog