மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் கோரி போராட்டம்: தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி அறிவிப்பு
மத்திய அரசு ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் வட்டாரக்கல்வி அலுவலகங்கள் முன் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் முருகன் முன்னிலை வைத்தாா். கல்வி மாவட்டச் செயலா் பெரியகருப்பன் வரவேற்புரையாற்றினாா். கூட்டத்தில், திமுக தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியான அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியா்களுக்கு, மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழக அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 2022 ஜனவரி முதல் 3 சதவீத அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும்.
இதையும் படிக்க | தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு "பெரியார் 1000" வினா விடைப் போட்டி தேர்வினை நடத்திட அனுமதி வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இணை இயக்குனரின் செயல்முறைகள் - நாள்: 18.07.22 பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்யும் முடிவை தமிழக அரசு திரும்பப் பெற்று உடனடியாக நிரந்தர ஆசிரியா்களை நியமனம் செய்ய வேண்டும். அரசு ஊழியா்கள் பெற்று வந்த ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை தமிழக அரசு மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும்.
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சலுகைகளும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது.
ஜூலை 21 இல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள் முன்பாக ஆா்ப்பாட்டம், ஆகஸ்ட் 13 இல் மாவட்ட தலைநகரில் தா்னா போராட்டம், மூன்றாவது கட்டமான சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் மதுரையில் இருந்து பலா் பங்கேற்பது என தீா்மானிக்கப்பட்டது. முடிவில், மாநில பொதுக்குழு உறுப்பினா் சந்திரன் நன்றி கூறினாா்

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.