அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, June 14, 2022

Comments:0

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை

டி.சி., இல்லாவிட்டாலும் 'அட்மிஷன்'; அரசு பள்ளிகளுக்கு அறிவுரை

Headmasters have been advised to enroll students in government schools, even if they do not have the DC of Alternative Certificate. Have volunteered.

There has been a delay for parents in enrolling students in other schools due to problems in obtaining alternative certificates in some private schools. In this connection, instructions have been issued to the Headmasters of Government Schools on behalf of the Primary Education Officers. Accordingly, students wishing to enroll in government schools should apply immediately and be admitted to the schools.

Even if you do not bring alternative certificates from other schools, you will have to give the student admission first. Said. மாற்று சான்றிதழ் என்ற டி.சி., இல்லாவிட்டாலும், மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்த்து கொள்ள வேண்டும் என, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில், புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவங்கி உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளோர், தங்கள் குழந்தைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சேர்க்க முன்வந்துள்ளனர்.

சில தனியார் பள்ளிகளில் மாற்று சான்றிதழ்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படுவதால், வேறு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில், பெற்றோருக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் தரப்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களை, உடனடியாக விண்ணப்பம் வழங்கி, பள்ளிகளில் சேர்த்து கொள்ள வேண்டும்.

வேறு பள்ளிகளில் இருந்து மாற்று சான்றிதழ்கள் கொண்டு வராவிட்டாலும், முதலில் மாணவர் சேர்க்கை வழங்கி விட வேண்டும்.அதன்பின், தாங்கள் முன் படித்த பள்ளிகளில் இருந்து, மாற்று சான்றிதழ் வாங்கி வர, கால அவகாசம் வழங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாற்று சான்றிதழ்கள் வழங்குவதில், தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கும், சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews