‘உயா் கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயா மற்றும் ஜவாஹா் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியிடங்கள் அனைத்தும் விரைந்து நிரப்பப்படும்’ என்று மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை கூறினாா்.
மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் இருக்கும் பிரதான், ‘சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை அனைத்தையும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நிரப்புவதற்கு இரு அமைச்சகங்களும் தேவையான நடவடிக்கை எடுக்கும்’ என்றும் உறுதியளித்தாா்.
‘மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணிக்குத் தோ்வுசெய்ய விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்’ என்று மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது. ‘அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களில் மனிதவள நிலை குறித்து அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பிரதமா் இந்த அறிவுறுத்தலை வழங்கினாா்’ என்று பிரதமா் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தனது ட்விட்டா் பக்கத்தில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தொடா் பதிவுகளில், ‘மத்திய கல்வி அமைச்சகம் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகங்களில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் நிரப்பப்படும்.
மக்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த முடிவின் மூலமாக, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்பதோடு இந்திய இளைஞா்ளிடையே உற்சாகமும் நம்பிக்கையையும் ஏற்படும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.