தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2022- 23ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பின்வருமாறு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பள்ளிகளில் சேராத மாணவர்கள் எவரும் இல்லை என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். 86வது சட்டத் திருத்தத்தின்படி தொடக்கக் கல்வி, அடிப்படை உரிமையாக்கப்பட்டு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. மாணவர்களை அரசு பள்ளியை நோக்கி ஈர்க்கும் வண்ணம் செயல்பட வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மற்றும் தொடக்கக் கல்வி நிர்வாகம் என்ற முக்கூட்டின் தலையாய கடமையாகும். எனவே, 5 வயது பூர்த்தியடைந்த அனைத்து குழந்தைகளையும் அரசுப் பள்ளியில் சேர்ப்பதற்கு கீழ்க்கண்ட முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் கூட்டம்
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டங்கள் நடத்தி, அதில் உள்ளூர் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பங்கு பெறச் செய்து அரசு பள்ளிகளில் கட்டணமே பெறப்படாமல் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட்டு வருகின்றது என்பதை எடுத்துரைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர்களை (PRO) அணுகி அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் குறித்து செய்தித்தாட்களில் செய்திகள் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
DOWNLOAD DEE FULL PROCEEDINGS HERE
CLICK HERE TO DOWNLOAD
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.