மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - செய்தி அறிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 16, 2022

Comments:0

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் - செய்தி அறிக்கை

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

செய்தி அறிக்கை

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை உயிர்தொழில் நுட்பவியல்

என்னும் (M.Sc. Biotechnology) பட்டப்படிப்பு கடந்த 1985ம் ஆண்டு முதல் ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கி வரும் உயிர் தொழில் நுட்பத்துறையின் உதவியுடன் நடத்தப்பெற்று வருகின்றது. இப்பட்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை ஒன்றிய அரசின் இடஒதுக்கீட்டு முறையினைப் பின்பற்றி, ஒன்றிய அரசின் உயிர்தொழில்நுட்பத்துறை தற்பொழுது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் என்பதனால், மேற்கண்ட மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டு விகிதாச்சாரம் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதியின்படிதான் (69%) மாணவர் சேர்க்கை நடத்தப்பெற வேண்டும் எனும் கருத்துருவை வலியுறுத்தி மதுரை காமராசர் பலகலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒன்றிய அரசின் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இயங்கிவரும் உயிர் தொழில்நுட்பத்துறையின் செயலருக்கு ஒரு வலியுறுத்தல் கடிதத்தை 14.06.2022 அன்று சமர்ப்பித்துள்ளார்.

எனவே, முதுகலை உயிர் தொழில்நுட்பவியல் பட்ட மேற்படிப்பிற்கான, மாணவர் சேர்க்கை, தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றி கணக்கீடு செய்தால் அது கீழ்க்காணும் வகையில் அமையும்: அனுமதிக்கப்பட்ட மொத்த மாணவர் சேர்க்கை இடங்கள் : 30 இக்கல்வியாண்டில் (2022-2023), மேற்கண்ட மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை மேற்குறிப்பிட்டுள்ள தமிழக அரசின் இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றியே நடத்தப்படும் என இதன் வாயிலாகத் தெரிவிக்கப்படுகின்றது.

IMG_20220616_180147

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

84725051