மருத்துவம் சார்ந்த படிப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 1 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, June 20, 2022

Comments:0

மருத்துவம் சார்ந்த படிப்புகள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 1

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷில் செயல்படும் ஆல் இந்தியா இன்ஸ்ட்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் - எய்ம்ஸ் கல்வி நிறுவனத்தில் எம்.எஸ்சி., மற்றும் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தில் 2012ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி, தன்னாட்சி அதிகாரத்துடன் நாட்டின் சிறப்பு கல்வி நிறுவன அந்தஸ்துடன் இக்கல்வி நிறுவனம் துவக்கப்பட்டது.

வழங்கப்படும் படிப்புகள்:

எம்.எஸ்சி., மெடிக்கல் பயோகெமிஸ்ட்ரி - 3 ஆண்டுகள்

எம்.எஸ்சி., மெடிக்கல் பிசியோலஜி - 3 ஆண்டுகள்

எம்.எஸ்சி., மெடிக்கல் பார்மாகோலஜி - 3 ஆண்டுகள்

எம்.எஸ்சி., பர்பூசன் டெக்னாலஜி - 2 ஆண்டுகள்

தகுதிகள்:

எம்.பி.பி.எஸ்., பி.வி.எஸ்சி., பி.பார்ம்சி, பேச்சுலர் ஆப் பிசியோதெரபி, பி.எஸ்சி., ஆகியவற்றில் ஏதேனும் ஒரு படிப்பை குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் நிறைவு செய்தவர்கள் எம்.எஸ்சி., படிப்புகளில் சேர்க்கை பெற விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 55 சதவீத மதிபெண் பெற்றிருந்தால் போதும்.

எம்.எஸ்சி., பர்பூசன் டெக்னாலஜி படிப்பில் சேர்க்கை பெற பி.எஸ்சி., பர்பூசன் டெக்னாலஜி அல்லது இயற்பியல் பாடத்துடன் கூடிய பி.எஸ்சி., லைப் சயின்சஸ் படிப்பை படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை:

ஆன்லைன் வாயிலான நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவு அல்லது விரைவு அஞ்சல் வாயிலாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 1

ஆராய்ச்சி படிப்புகள்:

பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோ பயோலஜி, ஜெனரல் மெடிசின், பாத்தாலஜி ஆகிய துறைகளில் வழங்கப்படும் பிஎச்.டி., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 26

விபரங்களுக்கு: https://aiimsrishikesh.edu.in/

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews