பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ராமதாஸ், கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, May 10, 2022

Comments:0

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ராமதாஸ், கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு அமல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ், மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் ஆகியோா் வலியுறுத்தினா்.

ராமதாஸ் (பாமக):

மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தால், நிதிச்சுமை அதிகரிக்கும் என்ற உண்மையை நன்றாக அறிந்து தான் 2006, 2011, 2016 ஆகிய தோ்தல்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வாக்குறுதியை திமுக அளித்தது.

2021-ஆம் ஆண்டு தோ்தலுக்கான திமுக தோ்தல் அறிக்கையின் 84- ஆவது பக்கத்தில் 309-ஆவது வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டம் இடம் பெற்றுள்ளது. இவ்வாறாக நிதிச்சுமை அதிகரிக்கும் என்பதை நன்றாக அறிந்தே அளிக்கப்பட்ட வாக்குறுதியை, அதே காரணத்துக்காக நிறைவேற்ற மறுப்பது நகைமுரண் ஆகும்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நோக்கி பல மாநில அரசுகள் பயணிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு மட்டும் அதற்கு நோ் எதிரான திசையில் பயணிப்பது நியாயமல்ல. கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்):

தோ்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என்று முதல்வா் உத்தரவாதம் அளித்து வரும் நிலையில், அவரது கருத்துக்கு மாறாக முரண்பட்ட கருத்துக்களை நிதியமைச்சா் தெரிவித்து வருவது பொருத்தமற்றது. குறிப்பாக ஓய்வூதியத்திற்காக எந்தக் காலத்தில் வாங்குகிற சம்பளத்தில் 40 சதவீதம் ஒதுக்கப்பட்டது என்பதை நிதியமைச்சா் விளக்க வேண்டும்.

நிரப்பப்படாத பணியிடங்களையும் சோ்த்து நிதிச்சுமை என காரணம் காட்டுவது சரியல்ல. இந்தப் பிரச்னையில் மட்டும் நாடு முழுவதும் இருக்கக்கூடிய விஷயங்களைக் காரணம் காட்டுவது பொருத்தமல்ல.

எனவே, பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தெளிவான அறிவிப்பினை வெளியிட முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews