திருப்புதல் தேர்வு வினாத்தாள்
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, திருப்புதல் தேர்வு வினாத்தாள் வழங்க தாமதமானதால், மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு
தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு, கடந்த 28ம் தேதி துவங்கியது. முதல் கட்ட திருப்புதல் தேர்வு போல், இந்த தேர்வில் வினாத்தாள் லீக் என்ற பிரச்னை இல்லை. ஒவ்வொரு நாளும் முதன்மை கல்வி அலுவலகத்தில் இருந்து, வினாத்தாள்கள் அச்சடித்து வழங்கப்பட்டன. தேர்வும் தாமதமாக துவங்கியது.
நேற்று பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் பாட தேர்வுக்கு, சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் உட்பட பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, வினாத்தாள் வழங்க 30 முதல் 45 நிமிடங்கள் தாமதமானது; தேர்வும் தாமதமாக துவங்கியது. சில இடங்களில் மாணவர்களுக்கு தேர்வு எழுத, கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
4ம் தேதி விருப்ப பாட தேர்வு
சில பள்ளிகளில் கூடுதல் நேரம் வழங்காததால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வில், 10ம் வகுப்பில் முக்கிய பாடங்களுக்கு நேற்றுடன் தேர்வு முடிந்தது. தமிழ் அல்லாத பிற மொழி மாணவர்களுக்கு, வரும் 4ம் தேதி விருப்ப பாட தேர்வு நடக்கிறது. பிளஸ் 2வுக்கு வரும் 5ம் தேதி தேர்வு முடிகிறது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.