தமிழகத்தில் பள்ளி வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, April 07, 2022

Comments:0

தமிழகத்தில் பள்ளி வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு?

Schools in Tamil Nadu have not been opened properly for the last 2 years ... students also studied online .. exams were conducted online .. As a result, corona infections are gradually declining, schools and colleges are being opened and live classes are being held.

Summer sun

In this situation, the sun has already started to shine in Tamil Nadu .. It is feared that the impact of this sun will be even more in the coming month .. The government is always counting the summer sun and announcing the summer holidays .. .



Therefore, the Tamil Nadu Teachers' Union has requested the Government of Tamil Nadu to change the school hours.

Fort



On behalf of the Tamil Nadu Teachers' Union, I would like to congratulate the Hon'ble Chief Minister for making Tamil Nadu the premier state in India since he took over the reins of government.



The scorching sun



It is noteworthy that the running hours of schools have been changed in some states for the benefit of students in view of the scorching sun across the country. School time in Andhra Pradesh starts at 8 am and ends at 11 am. Similarly, in Karnataka, the holiday season for schools to choose from ... In Tamil Nadu, the sun has already crossed the hundred.



Normalcy





The awning will peak in the coming seasons. Due to the effects of the sun, various skin diseases and fevers become commonplace in children. Learning and teaching can only be better if the body and mind are in harmony. Currently 1st to 9th grade is scheduled for May 13th and 10th to 12th May 30th.





On behalf of the Tamil Nadu Teachers Union, I urge the Chief Minister to change the school hours from 7.30 am to 12.30 pm and keep the students in check till the end of May to cope with the heat wave. ” கோரத்தாண்டவம்

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை... மாணவர்களும் ஆன்லைன் மூலம்தான் படித்து வந்தனர்.. ஆன்லைனில்தான் தேர்வுகளும் நடந்து வந்தது..

இதையடுத்து, கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.. மேலும் தேர்வுகளுக்கான கால அட்டவணையும் வெளியாகி உள்ளன.

கோடை வெயில்

இந்நிலையில், வெயில் இப்போதே தமிழகத்தை வாட்ட துவங்கிவிட்டது.. வரும் மோ மாதம் இந்த வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.. எப்போதுமே இந்த கோடை வெயிலை கணக்கிட்டுதான், கோடை விடுமுறைகளை அரசும் அறிவித்து வருகிறது.. ஆனால், ஏப்ரல் மாதமே வெயில் தாக்கம் உச்சத்துக்கு வந்துள்ளதால், பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இளமாறன்

எனவே, பள்ளி நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.. தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் இளமாறன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கையை விடுத்துள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

கோட்டை

முதல்வருக்கு "ஆட்சி பொறுப்பேறற்றதிலிருந்து தமிழகத்தை இந்திய மாநிலங்களிலேயே முதன்மை மாநிலமாக மாற்றிவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வாழ்த்திப் பாராட்டுகிறேன். மேலும்கோடை விடுமுறை காலத்தில் பள்ளி நடைபெறக்கூடிய காலகட்டங்களில் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். கடந்த காலங்களை காட்டிலும் வெயிலின் உக்கிரம் இந்த வருடம் ஆரம்பத்திலேயே கூடுதலாக உள்ளது.

சுட்டெரிக்கும் வெயில்

நாடு முழுதும் சுட்டெரிக்கும் வெய்யில் கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன்கருதி பள்ளிகள் இயங்கும் நேரம் சில மாநிலங்களில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆந்திராவில் பள்ளி நேரம் என்பது காலை 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் நிறைவடைந்து விடுகிறது. அதேபோல கர்நாடகத்தில் தேர்வு வைத்து பள்ளிகளுக்கு விடுமுறை விட்டாச்சு... தமிழ்நாட்டில் இப்போதே வெய்யில் சதத்தைத் தாண்டியுள்ளது. சகஜத்தன்மை

எதிர்வரும் காலங்களில் வெய்யில் உச்சத்தைத் தொடும். வெய்யிலின் தாக்கத்தினால் பல்வேறு சரும நோய்கள், காய்ச்சலால் குழந்தைகளுக்கு சகஜத்தன்மை மாறுகின்றது. உடலும் உள்ளமும் ஒருசேர ஒழுங்காக இருந்தால் மட்டுமே கற்றலும் கற்பித்தலும் சிறப்பாக நடக்கும். தற்போது 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை மே 13 வரைக்கும் 10 முதல் 12 வரை மே 30 வரை திட்டமிடபட்டுள்ளது.

கோரத்தாண்டவம்

வெய்யிலின் கோரத்தாண்டவத்தை சமாளிக்கும் வகையில் மே மாதம் தேர்வு முடியும் வரை பள்ளி நேரத்தை காலை 7.30 லிருந்து 12.30 வரை மாற்றியமைத்து மாணவர்களை பேணும்படி முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் பணிவுடன் வேண்டுகின்றேன்" என தெரிவித்துள்ளார். இதையடுத்து, மாணவர்களின் நலன்கருதி, பள்ளிகளின் நேரம் விரைவில் மாற்றியைமக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews