புதிய ஆன்லைன் பாடங்கள் ; AICTE கருத்து கேட்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, April 20, 2022

Comments:0

புதிய ஆன்லைன் பாடங்கள் ; AICTE கருத்து கேட்பு

புதிய ஆன்லைன் பாடங்கள்

இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்நுட்ப கல்வியில், புதிய ஆன்லைன் பாடங்கள் துவங்குவது தொடர்பாக, கல்வியாளர்கள் ஆலோசனை கூற, ஏ.ஐ.சி.டி.இ., வேண்டுகோள் விடுத்துள்ளது.புதிய கல்வி கொள்கையின் முக்கிய அங்கமாக, உயர்கல்வியில் ஆன்லைன் வழி மற்றும் தொலைநிலை கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.

AICTE கருத்து கேட்பு

இதன்படி, மத்திய அரசின் ஸ்வயம் தளம் வழியே, பல்வேறு பாடப்பிரிவுகள் சார்ந்த, ஆன்லைன் படிப்புகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், இன்ஜினியரிங் போன்ற தொழில்நுட்ப கல்லுாரிகளில், தற்போதைய தொழில் நிறுவனங்களுக்கு தேவையான ஆன்லைன் வழி பாடப் பிரிவுகளை அதிகரிக்க, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. புதிய பாடங்கள் மற்றும் படிப்புகள்

இதற்காக, தொழில் நிறுவனத்தினர், கல்வியாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும், புதிய பாடங்கள் மற்றும் படிப்புகள் குறித்து, தங்களின் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என்று, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., அறிவித்து உள்ளது.

மே, 15க்குள் அனுப்ப வேண்டும்

ஆலோசனை தெரிவிக்க விரும்புவோர், aicteswayam1@aicte-india.org என்ற 'இ- - மெயில்' முகவரிக்கு, ஆன்லைன் படிப்பு தொடர்பான தகவல்களை, குறும்பட வீடியோவுடன் இணைத்து, மே, 15க்குள் அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews