இணைப்பு அங்கீகாரம்
இன்ஜினியரிங் கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் கோரி விண்ணப்பிப்பதற்கான அவகாசம், 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள், மத்திய அரசின் தொழில்நுட்ப அங்கீகார அமைப்பான, ஏ.ஐ.சி.டி.இ., எனப்படும்,
AICTE
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற வேண்டும்.இதன்பின், அண்ணா பல்கலையின் இணைப்பு அந்தஸ்துக்கு விண்ணப்பித்து, அதற்கான அங்கீகாரமும் பெற வேண்டும்.இந்நிலையில், வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான, அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் கோரி, இன்ஜினியரிங் கல்லுாரிகள் விண்ணப்பிப்பதற்கான அவகாசம், வரும் 22ம் தேதியுடன் முடிவதாக இருந்தது.
அண்ணா பல்கலை அவகாசம்
இந்த காலகட்டத்தில் விண்ணப்பிக்காத இன்ஜினியரிங் கல்லுாரிகள், 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், 22ம் தேதிக்கு பின் விண்ணப்பிக்கும் கல்லுாரிகள், அபராத கட்டணமாக, 50 ஆயிரம் ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.