முறைக்கும் மாணவர்கள்... அலறும் ஆசிரியர்கள் - இதோ இரு மாத மிரட்டல் பட்டியல்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, March 31, 2022

1 Comments

முறைக்கும் மாணவர்கள்... அலறும் ஆசிரியர்கள் - இதோ இரு மாத மிரட்டல் பட்டியல்!

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக, மாணவர்கள் வன்முறையை கையில் எடுக்கும் சம்பவங்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி, அலைகளை உருவாக்கியுள்ளது. பணி பாதுகாப்பு வேண்டுமென ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதற்காக, பள்ளிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இது நிரந்தர தீர்வாக அமையாது என்கின்றனர் உளவியல் மருத்துவர்கள். குறிப்பாக, ஆசிரியர்-மாணவர் உறவில் ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியை நிரப்புவதற்கு, அறிவியல் பூர்வமாக தீர்வை நடைமுறைப்படுத்த, பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும். வெறும் பாடத்திட்டத்தை முடிப்பதிலும், கல்வித்துறை தரும் பாடத்திட்டத்தை சாராத பணிகளில் ஈடுபடுவதும் மட்டுமே, ஆசிரியர்களின் கடமையாக தொடர்கிறது. மாணவர்களை உளவியல் ரீதியாக எப்படி வழிநடத்த வேண்டுமென்ற ஆலோசனை, ஆசிரியர்களுக்கு தேவைப்படுகிறது. இதேபோல், நன்னெறி வகுப்புகள், நீதிபோதனைகள் மூலம், அறம் சார்ந்த வாழ்வியல் குறித்து, அறிந்து கொள்ளும் வாய்ப்பை, மாணவர்களுக்கு உருவாக்க வேண்டியது, கட்டாயம் என்பது பலரது கருத்தாக உள்ளது.

மனநல மருத்துவர் சீனிவாசன் கூறுகையில், ''பாடத்திட்டத்தில் மனநலனிற்கு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. உளவியல் ஆலோசனை மாணவர்களை போல ஆசிரியர்களுக்கும் தேவைப்படுகிறது. குறிப்பிட்ட இடைவெளியில், இதை வழங்குவது கல்வித்துறையின் பொறுப்பு. கண்டிப்பு மிகுந்தாலும், குறைந்தாலும் ஆரோக்கியமான தலைமுறை உருவாவது கேள்விக்குறியே.

நன்னெறி வகுப்புகள் இல்லாததால், தான் செய்வது தவறு என்பதை உணருவதற்கு கூட, சிறார்கள் தயாராக இருப்பதில்லை. உடல், மன ஆரோக்கியம் மேம்படுத்தாமல், கல்வி மட்டும் அளிப்பதால் பலனில்லை.

உளவியல் ஆலோசனை வழங்காததும், வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணம். ஆசிரியர்-மாணவர் உறவை வலுப்படுத்த, கல்வித்துறை சில ஆக்கப்பூர்வ மாற்றங்களை கொண்டுவர வேண்டியது அவசியம்,'' என்றார். இதோ இரு மாத மிரட்டல் பட்டியல்!

கடந்த இரு மாதங்களில் மட்டும், தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் அரங்கேறிய வன்முறை சம்பவங்களின் பட்டியல் இதோ! சம்பவம் 1: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பார்வையற்ற ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்கும் போது, மாணவர்கள் கேலி செய்து, எழுந்து நடனமாடியதாக வீடியோ வெளியானது.

சம்பவம் 2: கரூர் மாவட்டம், தோகைமலை, அரசு மேல்நிலைப்பள்ளியில், முடிவெட்டி வருமாறு கூறிய ஆசிரியரை, சினிமா பாணியில் ஊர்க்காரர்களை அழைத்து வந்து, மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவம் 3: இந்த சர்ச்சை அடங்கி முடிவதற்குள், தேனி மாவட்டம், ஆத்துார் அருகே, மஞ்சினி அரசுப்பள்ளியில், தலைமையாசிரியரை மாணவர் ஒருவர் மிரட்டி, நாற்காலிகளை உடைத்தது போன்ற வீடியோ வெளியானது.

சம்பவம் 4: உச்சக்கட்டமாக, தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், 'ஏறுனா ரயிலு... இறங்குனா ஜெயிலு' என ஆசிரியரையே மிரட்டுவது போன்ற வீடியோ வெளியானது

1 comment:

  1. ஐயா/அம்மையீர்,இந்த பதிவில் தாங்கள் குறிப்பிட விரும்புவது என்னவென்றே தெரியவில்லை,ஏனென்றால் உளவியலார் பாடத்திட்டத்தில் நன்னெறி வகுப்புக்கள் இல்லையென்று கூறுகிறார்கள் என்கிறீர்கள் பழையகாலத்தில் நன்னெறி பாடபிரிவு இருந்ததால்தான் ஆசிரியர் மீது துவேஷம் நடைபெறவில்லை என்கிறீர்களா?என்ன சொல்லவருகிறீர்கள்!ஆசிரியர்கள்,மாணவர்களிடையே எந்த வருடத்திலிருந்து பிரிவினை ஏற்பட்டது என்று ஆய்வறிக்கை கட்டுரைகளை பதிவிடுங்கள்,பின் எதனால் ஆசிரியர்களிடம் மாணவர்கள் இதுபோன்று நடவடிக்கைகளின் காரணிகளை பட்டியலிடுங்கள்,எந்த வகையான ஆசிரியர்களிடம் எந்த வகையான மாணவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பதனை வகைப்படுத்தி அதற்காண காரணத்தை கண்டறியுங்கள் பின்னர் அதற்கான வழிமுறைகளை கூறுங்களேன் உபயோகமாக இருக்குமெ.

    ReplyDelete

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews