ஆசிரியர் மாறுதல் -Staff fixation சார்ந்து அரசுக்கு கோரிக்கை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, February 21, 2022

Comments:0

ஆசிரியர் மாறுதல் -Staff fixation சார்ந்து அரசுக்கு கோரிக்கை

ஆசிரியர் மாறுதல் -Staff fixation சார்ந்து அரசுக்கு கோரிக்கை

கூடுதலாக சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையைக் Staff fixation - ல் கணக்கிட்டு அனுமதிக்கப்பட்ட தேவை பணியிடங்களில் ( Need Post) உபரி ஆசிரியர்களை ( Surplus Teachers) நியமித்த பின்னர், மீதமுள்ள பணியிடங்களில் பொது மாறுதலில் ஆசிரியர்களை நியமிப்பதே கூடுதலாக மாணவர்கள் சேர்ந்த பள்ளிகளின் வளர்ச்சிக்கு உதவும்.

அரசுப் பள்ளிகளை நம்பி குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்த பெற்றோர்களின் நம்பிக்கையை வலுப்படுத்த கூடுதலாக மாணவர்கள் சேர்ந்த பள்ளிகளில் முழுமையாக ஆசிரியர்கள், தற்போதைய கலந்தாய்வின் மூலம் அனுமதிக்கப்பட வேண்டும். Need post நிர்ணயிக்கப்பட்டதன் நோக்கம் உபரி ஆசிரியர்களை (Surplus Teachers) அந்தப் பணியிடங்களில் நியமிப்பதற்காக மட்டுமே என இருந்தால் அது நிர்வாகப் பணியாக மட்டும் இருக்கும்.

இதையும் படிக்க | நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் விவரம்!

அரசுப்பள்ளிகளை நம்பி குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்த பெற்றோர்களின் நம்பிக்கையை முழுமையாக்க Need post அனைத்தையும் முழுமையாக நிரப்ப கலந்தாய்வில் அரசு ஆவன செய்ய வேண்டும்.

பள்ளிக் கல்வித் துறையில் staff fixation மூலம் Need post அனுமதிக்கப்பட்ட பள்ளிகளுக்கு உபரி ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பியதுடன், மாணவர்களின் கல்வி நலன் கருதி இயக்குநர் தொகுப்பில் இருந்தும் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன.(தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் ( பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க. எண்: 040678 / சி3/ இ1/ 2021 நாள்: 13/01/2022.)

அதனைப் போல தொடக்கக் கல்வித் துறையிலும் Need Post பணியிடங்களுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பில் இருந்தோ அல்லது அரசின் அனுமதி பெற்றோ ஆசிரியர்கள் கலந்தாய்வில் அனுமதிக்கப்பட்டு நியமிக்கப்பட வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews