2004 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, February 23, 2022

Comments:0

2004 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்

2004 ஆம் ஆண்டு அல்லது அதற்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் 2022 பட்ஜெட்டில் இன்று ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு.
ராஜஸ்தான் மாநில பட்ஜெட்டில் *பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்* என அறிவிப்பு.

தமிழக பட்ஜெட்டில் அறிவிக்க நாம் வலியுறுத்தலாம்.

நமது அரசின் நிலைப்பாடு - " தற்போது நிதி நிலைமை சரியில்லை. பிறகு சரியாகிவிடும், அதன்பிறகுதான் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்" என்பதாகும்.

பழைய ஓய்வூதிய திட்டம் அமல் படுத்தினால், தற்போது நிதி தேவையில்லை, பிறகுதான் தேவைப்படும். தற்போது நிதி தேவையில்லை என்பதோடு, நம்மிடம் பிடிக்கப்பட்ட 10% தொகையும் அரசுக்கு கிடைக்கும். இந்த10% நம்மிடம் பிடிக்கப்பட்ட தொகை, இதுவரை ஓய்வூதிய ஒழுங்காற்று வாரியத்திடம் அளிக்கப்படாமல் உள்ளது. இதனை தற்போதைய அரசின் நிதி தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இது தற்போதைய அரசின் நிலைப்பாட்டோடு ஒத்துப்போகிறது.

எனவே பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துவதால், அரசாங்கத்திற்கு தற்போதைக்கு செலவும் இல்லை. வருமானமே. அதோடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்ட கோரிக்கையை நிறைவேற்றியுமாயிற்று.

இதனை நாம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடமும், நிதியமைச்சர் அவர்களிடமும், தலைமைச் செயலாளர் மற்றும் நிதித்துறை செயலாளர் அவர்களிடமும் எடுத்துக்கூறி வலியுறுத்தி வருகிற பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாக ஆவன செய்யலாம்.

தீர்மானம், கோரிக்கை மனு அளித்தல், நேரில் வலியுறுத்தல் போன்றவற்றை பட்ஜெட்டிற்கு முன் செய்யலாம்.

பழைய ஓய்வூதியத் திட்ட கோரிக்கையை நிறைவேற்ற தற்போதைக்கு, *அரசாங்கத்திற்கு நிதி தேவை இல்லை*. *மனம் தான் தேவை*.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews