அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடக்க உள்ளது. அதில் பரிசுகள் பெறும் மாணவர்கள் பட்டியலை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. பொறியியல் மாணவர்களுக்கான தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியலுடன் பரிசு பெறும் மாணவர்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவ -மாணவியருக்கு பட்டமளிப்பு விழாவில் பரிசுகளுடன் சான்றுகள், பட்டங்கள் வழங்கப்பட உள்ளன. கடந்த 2020-2021ம் ஆண்டுக்கான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் தொடக்கம் முதல் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கான பட்டியலில் இடம் பெற்றுள்ள மாணவர்களுக்கு பிரிவு வாரியாக முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
பிஆர்க் பிரிவில் 52, பிஇ ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் பிரிவில் 42, மெக்கானிக்கல் பிரிவில் 50, ஐடி பிரிவில் 52 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். பிஇ ஆட்டோமொபைல் பிரிவில் 32, சிவில், சிஎஸ்இ, இஇஇ பிரிவுகளில் தலா 51 பேரும் இடம் பிடித்துள்ளனர். இதர பாடப் பிரிவுகளில் 264 பேர் இடம் பிடித்துள்ளனர். மேலும், எம்சிஏ பிரிவில் 57, எம்பிஏ பிரிவில் 53, எம்இ பிரிவில் 110 எம்டெக் பிரிவில் 6, எம் ஆர்க் பிரிவில் 9 பேரும் இடம் பிடித்துள்ளனர்.
வழக்கம் போல இந்த ஆண்டும் தர வரிசைப் பட்டியலில் தனியார் பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவ மாணவியரே அதிக அளவில் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அண்ணா பல்கலைக் கழக வளாகக் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகளில் படித்த மாணவ மாணவியர் குறைந்த அளவில் இடம் பிடித்துள்ளனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.