பள்ளிகளில் புகார் பெட்டி - முதன்மைக்கல்வி அலுவலர் தகவல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, December 01, 2021

Comments:0

பள்ளிகளில் புகார் பெட்டி - முதன்மைக்கல்வி அலுவலர் தகவல்

தமிழகத் தில் பள்ளிகளில் குழந் தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்போர் மீது போக்சோ மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும். இது குறித்து புகார் தெரிவிக்கபாடபுத்த கத்தில் முதல் பக்கத்தில் 14417 மற்றும் 1098 என்ற எண்ணை அச்சிட, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளார்.இதை உ யடுத்து மாநிலம் முழுவ தும் பள்ளிகளில் 'நிமிர்ந்து நில், துணிந்து சொல்' என்ற பெண் குழந்தைகள் பாது காப்பு திட்டத்தின் கீழ், உதவி எண்கள் பாடபுத்த கங்களில் அச்சிடப்பட்டு வருகிறது.

இது குறித்து முதன் மைக்கல்வி அலுவலர் சுவா மிநாதன் கூறும்போது. ‘மதுரை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளில் உள்ள அனைத்து பகுதிக ளிலும், குழந்தைகள் பாது காப்பு எண்: 1098, பெண்கள் ஹெல்ப்லைன்: 1091 மற்றும் புகாருக்கு 14417 என்ற எண் கள் கொண்ட அச்சுகள் அனைத்து இடங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகள்தோறும் புகார் பெட்டிகளும் வைக் கப்பட்டுள்ளன. இதனை நாள்தோறும் தலைமையா சிரியர்கள் கண்காணிக்க உத்தரவிட்டப்பட்டுள்ள து” என்றார்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews