சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமனம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, December 12, 2021

Comments:0

சைவ அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளிக்கு ஆசிரியர்கள் நியமனம்: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கடந்த 4.9.2021 அன்று நடந்த மானியக் கோரிக்கையின் போது சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை உருவாக்கும் இந்து சமய அறநிலையத் துறையின் ஆறு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள் ரூ.1 கோடி 50 லட்சம் செலவில் மேம்படுத்தப்படும் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள கோயில்களில் உரிய பயிற்சியும், தகுதிகளும் உடைய இந்துகளில் அனைத்து ஜாதியினரும் ஜாதி வேறுபாடின்றி அர்ச்சகராக நியமனம் பெறுவதற்கு தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டன.

அதன்படி சைவ அர்ச்சகர் ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வழங்கும் பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் ஆகம ஆசிரியர் பணியிடங்களில் நியமனம் பெற விரும்புபவர்கள் உரிய விவரங்களை முழுமையாக அளித்து உரிய சான்றிதழ்களின் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தமிழில் முதுநிலை பட்டமும், பட்டதாரி ஆசிரியர் பயிற்சியும் பெற்றிருத்தல் வேண்டும். இந்து சமய இலக்கியங்களிலும் தமிழக கோயில்கள் வரலாற்றிலும் போதிய கற்றறிவு பெற்றிருத்தல் வேண்டும். பல்கலைக் கழகம், மேல்நிலைப்பள்ளி ஆகிய ஏதேனும் ஒன்றில் தமிழாசிரியராக குறைந்தபட்சம் ஐந்து ஆண்டு காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். தலைமை ஆசிரியருக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரமும், ஆகம ஆசிரியருக்கு தொகுப்பு ஊதியமாக மாதம் ஒன்றுக்கு ரூ.30 ஆயிரமும் வழங்கப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் பொதுவாக 1.12.2021 அன்று 35 வயது நிரம்பாதவராக இருத்தல் வேண்டும்.

இந்து சமயத்தவராகவும் பின்பற்றுபவராகவும் இருத்தல் வேண்டும். மேலும் சைவசமயக் கோட்பாடுகளைக் கடைபிடிப்பவர்களாகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்ப படிவம் கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது கோயில் www.maduraimeenakshi.org என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் கிடையாது. இந்த விண்ணப்பங்கள் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் மற்றும் தக்கார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் மதுரை என்கிற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews