இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க அனுமதிக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் இல்லம் தேடி கல்வி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக மதுரை மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் 2,088 மையம் தொடங்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. தற்போது 2ம் கட்டமாக மாநகராட்சி பகுதிகளில் நேற்று இல்லம் தேடி கல்வி மையம் தொடங்கப்பட்டுள்ளது. பயிற்சி மற்றும் பள்ளி கூராய்வு முடித்து மையங்களில் தன்னார்வலர்கள் மாலை 5 மணி முதல் 7 மணி வரை கல்வி கற்பித்து வருகின்றனர்.
பல கிராமங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே கல்வி கற்பிக்கப்படுகிறது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரையிலும், 6ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரையிலும் பாடம் நடத்த மாணவர்கள் பிரிக்கப்பட்டுள்ளனர். இதில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை தேடி கண்டுபிடிப்பதில் தன்னார்வலர்கள் மிக சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தன்னார்வலர்கள் பாடம் எடுக்கலாம் என அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தன்னார்வலர்கள் கூறுகையில், ‘மதுரை மாவட்டத்தில் வார்டு வரியாக பிரிக்கப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்களை தேடுவதும் மிக சிரமமாக உள்ளது. எனவே, 1 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்’ என்றனர்.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.