Breaking

Thursday, November 11, 2021

ஆறாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயமாக்க வலியுறுத்தல்

அரசுப் பள்ளி களில் மீண்டும் ஆறாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கொண்டுவர வேண் டும் என்று தமிழகமுதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட் டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடுபிஎட் கணினி அறிவியல் வேலை யில்லா பட்டதாரிகள் சங்கத் தின் தலைவர் வெ.குமரேசன் தமிழக முதல்வருக்கு அனுப்பி யுள்ள மனுவில் கூறியிருப்பதா வது:

ஏழை எளிய மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும் வகையில் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக முதன்முதலில் கணினி அறிவியல் பாடத்தை 6- ஆம் வகுப்பில் இருந்தே அறிமு கப்படுத்தியவர் மறைந்த முன் னாள் முதல்வர் கருணாநிதி. ஆனால் சில காரணங்களால் அந்தத் திட்டம் முடக்கப்பட் டது. இந்தநிலையில் திமுக அரசு தற்போது மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. எனவே, தற்போ தைய திமுக அரசு, தமிழகத் தில் உள்ள அரசுப் பள்ளிகள் மேன்மை அடையவும், கிரா மப்புற ஏழைஎளிய மாணவர் கள் உலகத்தரத்துக்கு இணை யாக உயர்ந்திடவும் அரசு பள் ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை கட்டாய கல்வியாக கொண் டுவர வேண்டும். கேரள மாநி லத்தில் அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் ஒன் றாம் வகுப்பு முதல் கட்டாயமா கவும் 6-ஆவது பாடமாகவும் உள்ளது.

தரம் உயர்த்தப்பட்ட அனைத் துஅரசு மேல்நிலைப் பள்ளிகளி லும் கணினி அறிவியல் பாடப் பிரிவை கட்டாயமாக்க வேண் டும்.

பள்ளிக்கு ஒரு கணினி ஆசி ரியரை நியமிக்க வேண்டும். கணினி அறிவியல் பாடத்தை நடைமுறைப்படுத்தினால் கோடிக்கணக்கான கிராமப்புற அரசுப் பள்ளி மாணவ, மாண விகள் பயன்பெறுவர். இதன் மூலம், பிஎட் முடித்த வேலை யில்லாகணினி அறிவியல் பட்ட தாரிகளுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog