Breaking

Wednesday, November 10, 2021

சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்த ஜாக்டோ- ஜியோ கோரிக்கை

நவ.9: பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தி கலைஞர் சத்துணவுதிட்டம் என்று பெயர் சூட்டவேண் டும் என்று ஜாக்டோ-ஜியோ வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவரும் ஜாக்டோ-ஜியோ ஒருங் கிணைப்பாளரும் மற்றும் செய்தித்தொடர்பாளர் தியாகராஜன் செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

பதினொன்று மற்றும் பனிரெண்டாம் வகுப்புக ளுக்குசத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தி முத்தமிழ் அறிஞர் டாக்டர்கலைஞர் சத்துணவு திட்டம் என்ற பெயர் சூட்ட வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியத் திட் டத்தைரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். அறிஞர் அண்ணா காலத்தில் கொண்டு வரப்பட்ட ஊக்க ஊதிய உயர்வு அதே முறைப்படி தொடர்வதற்கு ஏதுவாக புதிதாக வெளியிட்டுள்ள அரசாணையை திருத்தம் செய்து பழைய முறைப் படி வெளியிட வேண்டும்.

தொடக்க கல்வித்துறையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக் கும், தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் ஈர்த்துக்கொள்ளப்பட் டுள்ள முதுகலை பட்ட தாரி ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் தேர்வு வாரிய தர எண் அடிப்படையில் முதுகலை மற்றும் உயர்நி லைப் பள்ளி தலைமை ஆசி ரியர் பதவி உயர்வு வழங்க உரிய விதிமுறைகளை கொண்டு வேண்டும் என் றார். மாநில ஒருங்கிணைப் பாளர் ஆ.மணிகண்டன் உள்ளிட்ட கொண்டனர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog