பள்ளிக்கல்வி துறையின் சி.இ.ஓ.,க்களுக்கான மாதாந்திர ஆலோசனை கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் விபரம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, November 25, 2021

Comments:0

பள்ளிக்கல்வி துறையின் சி.இ.ஓ.,க்களுக்கான மாதாந்திர ஆலோசனை கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் விபரம்!

‘பாலியல் பிரச்னை குறித்து தகவல் வந்தால், உடனே அதுபற்றி விசாரணை நடத்த வேண்டும்; புகார் தரும் வரை காத்திருக்கக் கூடாது'' என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவி டப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையின் சி.இ.ஓ.,க்களுக் கான மாதாந்திர ஆலோசனை கூட்டம், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக வளர் கத்தில் நடந்தது. பள்ளி கல்வி கமிஷனர் நந்த குமார் தலைமையில், இயக் குனர்கள், இணை இயக்கு னர்கள் மற்றும் 38 மாவட்ட சி.இ.ஓ.,க்கள் பங்கேற்றனர். பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் பங்கேற்று, அதிகாரி களுக்கு அரசின் திட்டங்களை விளக்கினார். அத்துடன், அதிகாரிக ளுக்கு வழங்கப்பட்ட அறிவு றுத்தல்கள் விபரம்:

இல்லம் தேடி கல்வி திட்டம், முதல்வரின் நேரடி திட்டம் என்பதால், அதற்கு முக்கியத்துவம் அளித்து, சிறப்பாக செயல்படுத்த வேண்டும். திட்ட செயல் பாட்டில் விமர்சனங்கள் எழாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொது தேர்வுக்கான விபரங் களை சரியாக பதிவு செய்து, எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பள்ளி கட் டடங்களை ஆய்வு செய்து, உரிய பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

மாணவர் சேர்க்கையை தொடர்ந்து நடத்தலாம்

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங் அரசாணை தொடர்பாக வந்தால், அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தேவையற்ற இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது அரசு உதவி பெறும் பள்ளி களுக்கான, ஆசிரியர்களின் நியமன அனுமதிக்கு, உரிய நீதிமன்ற உத்தரவு மற்றும் இயக்குனரக விதிகளை பின் பற்ற வேண்டும்.

நீதிமன்ற வழக்குகளை முடிக்க வேண்டும் விரைந்து பாலியல் பிரச்னைகள் அதி கரித்து வரும் நிலையில், அரசு. மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு நெறி பயிற்சி ஒழுக்க அளிக்க வேண்டும். போக்சோ உள் ளிட்ட சட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஆசிரியர் களுக்கும், மாணவ, மாண வியருக்கும் ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிகள், வகுப்பறை களில், 1098 மற்றும் 14417 என்ற உதவி எண்களை, அறிவிப்பு பலகையாக வைக்க வேண்டும்.

பாலியல் ரீதியாக மாணவ, மாணவியர் மற்றும் ஆசி ரியைகளுக்கு பிரச்னை இருப்பது, யார் வாயிலாக தெரியவந்தாலும், வர வேண்டும் என காத் புகார் திருக்க கூடாது. உடனடி யாக பொறுப்புணர்வுடன் விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews